புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்?

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்?

பொதுவாக புரட்டாசி மாதத்தில் இந்துக்கள் பலரும் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து, விரதம் இருந்து கோயிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இருப்பினும் சிலருக்கு ஏன், எதற்கான புரட்டாசியில் அசைவம் சாப்பிட கூடாது என்ற கேள்வி எழும்புவதுண்டு.  உண்மையில் இதற்கு என்ன காரணம் என்பதை நாம் இங்கு முழுமையாக தெரிந்து கொள்வோம்.

ஏன் புரட்டாசியில் அசைவம் சாப்பிடக் கூடாது? 

  புரட்டாசி மாத தட்ப வெப்ப நிலை என்பது, அக்னி நட்சத்திர வெயில் காலமான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான பருவத்தில் நிலவும் வெப்பத்தை காட்டிலும் அதிக கேடு விளைவிக்கும், அந்த வெப்பம் நம்முடைய உடம்புக்கு ஒத்துக்கொள்ளாது.

இந்த சமயத்தில் அசைவ உணவுகளை சாப்பிட்டால் மேலும் கூடுதல் சூட்டை கிளப்பி வயிறு சம்பந்தமான உபாதைகளை ஏற்படுத்தி, நம்முடைய உடல் நலத்தை கெடுக்கும்.      

அறிவியல் பூர்வமான உண்மை :

அறிவியல் பூர்வமாக பார்த்தால், புரட்டாசி மாதத்தில் சூரியனின் வெளிச்சம் குறைந்து காணப்படும். இதன் காரணமாக பூமியின் சுழற்சி இயக்கத்தின் படி நமக்கு செரிமானக் குறைவும், வயிற்று உபாதைகளும் ஏற்பட்டு நம் உடம்பில் கெட்ட கொழுப்புகள் தங்கி விடும். 

ஆகவே தான், புரட்டாசி மாதம் முழுவதும் அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்த்துவிட்டு, நம்முடைய உடலுக்கும் மனதுக்கும் நன்மை விளைவிக்கும்.

 ஆன்மிக காரணம் :

ஜோதிடத்தில் 6வது ராசியாக அமைந்துள்ளது கன்னி ராசி. இந்த கன்னி ராசி அதிபதியாக புதன் பகவான் உள்ளார்.

கன்னி ராசிக்கான மாதம் புரட்டாசியில், அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ளாமல், விரதம் இருந்து கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்த வேண்டும் என சொல்லுகின்றனர்.

 இந்த காலத்தில் உடல் சூட்டால் ஏற்படக்கூடிய பிரச்னைகள் என்ன?

* தோல் சூடாவதோடு, உலர்ந்து போகுதல்,  அதிகமாக வியர்த்தல்

* உடல் வெப்பநிலை 105 பேரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்பு

* இதயத்துடிப்பு மற்றும் மூச்சு வாங்குதல் அதிகரிக்க வாய்ப்பு.

 * வயிறு தொடர்பான பிரச்சினையை ஏற்படுத்தும் .