முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும் பச்சை பயறு !!

முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும் பச்சை பயறு !!

பச்சை பயரில் புரதம், பி வைட்டமின்கள், துத்தநாகம், இரும்பு மெக்னீசியம், கால்சியம் மற்றும் பல முடிகளுக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் உள்ளன.

பி வைட்டமின்களில் ஒன்றான ஃபோலேட், பச்சை பயறில் அதிக அளவில் காணப்படுகிறது. இது முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்க உதவுகிறது மற்றும் முடியின் பொலிவு மற்றும் உயிர்ச்சக்தியை மீட்டெடுக்கிறது.

முடி வளர்ச்சிக்கு பச்சைப் பயறு பயன்படுத்துவது  தலைமுடி மற்றும் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க ஒரு சிறந்த வழியாகும். முடி வளர்ச்சியை ஊக்குவிக்க, முடிகளுக்கு உள்ளிருந்து ஊட்டம் கொடுக்க வேண்டும்

உடல் மற்றும் முடி செல்கள் நல்ல ஊட்டச் சத்துக்களைச் சார்ந்துள்ளன. முடி வளர்ச்சிக்கு முக்கியமான சத்துக்களான வைட்டமின் பி1 அல்லது தையமின் மற்றும் புரத சத்துக்கள் பச்சை பயறில் அதிக அளவு காணப்படுகின்றன.

பச்சை பயரில்  தாமிரம் உள்ளது. இது ஆரோக்கியமான உச்சந்தலை மற்றும் அடர்த்தியான கூந்தலுக்கு மிகவும் அத்தியாவசியமான கனிமமாகும். முடி வளர்ச்சிக்காக பச்சை பயறு உட்கொள்வது உடலுக்கு தேவையான அளவு தாமிரத்தை வழங்குகிறது.

தலைமுடி உடைந்து, உதிர்ந்து பலவீனமான நிலையில் உள்ளவர்கள், முடிக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் நிறைந்த உணவு பொருட்களை அன்றாட உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.  

முடி வளர்ச்சிக்கு பச்சை பயறை உணவாக உட்கொள்வதன் மூலமும் முடியில் தடவுவதன் மூலமும் ஊக்குவிக்க முடியும். பச்சை பயறு உடலின் உட்பற ஆரோக்கியத்தையும் பராமரிக்கிறது.