ஒல்லிக் குச்சியாக இருக்கிறீர்களா.? உடல் எடை அதிகரிக்க ஆசையா.?

ஒல்லிக் குச்சியாக இருக்கிறீர்களா.? உடல் எடை அதிகரிக்க ஆசையா.? 

இதை மட்டும் சாப்பிடுங்கள்.. ஒரே வாரத்தில் குண்டாகிடுவீங்க…!!

உடல் எடை குறைக்க வேண்டும் என பலர் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்தாலும் சிலர் உடல் எடையை அதிகரிக்க பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர், இன்று நாம் பார்க்கப் போவது உடல் எடையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பது தான். இதற்கு தேவையான பொருட்கள்: அவல் சிறிதளவு, காய்ந்த திராட்ஷை 5.பேரீச்சை பழம் 1. பால் 2 கப்.

செய்முறை : சிறிய பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் காய்ந்த திராட்சை மற்றும் பேரீச்சை பழம் போன்றவற்றை போட்டு சிறிது நீர் ஊற்றி ஊற வைத்துவிட வேண்டும். இது இரவு முழுவதும் ஊறியதும் காலையில் வடித்து எடுத்து கொள்ள வேண்டும்.

எடுத்து வைத்த அவலை 10 நிமிடம் ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். காய்ந்த திராட்சை, மற்றும் அவல் போன்றவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்.

கொதிக்கும் போது செய்து வைத்திருக்கும் அவல் கலவையை சேர்த்து நன்றாக கிளறவும். குடிக்கும் பதத்தில் இறக்கி வைத்துக் கொள்ளவும். இப்போது உணவு தயார். சுவைக்காக விரும்பினால் சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை காலை மற்றும் மாலையில் குடித்து வர உடல் எடை வேகமாக அதிகரிக்கும்..!!