வெல்லத்தை பயன்படுத்துவதற்கு முன்பு கவனிக்கவேண்டிய சில விஷயங்கள் !!
வெல்லத்தை பயன்படுத்துவதற்கு முன்பு கவனிக்கவேண்டிய சில விஷயங்கள் !!
சர்க்கரையை காட்டிலும் வெல்லம் உடல் ஆரோக்கியத்துக்கு அதிக நன்மை பயக்கும் ஆனால் நன்மை என்பதற்காக அதிக அளவு எடுத்துக்கொண்டால் அவை பக்கவிளைவுகளையும் உண்டாக்கும்.
வெல்லம் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுடன் நிரம்பிய அனைவருக்கும் விருப்பமான ஒன்று. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க கூடிய சிறந்த ஆற்றல் மூலமாகும்.
ஆயுர்வேதத்தில் பதட்டம், ஒற்றைத் தலைவலி, செரிமானம் மற்றும் சோர்வு உள்ளிட்ட பலவிதமான உடல்நல பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க பல ஆண்டுகளாக வெல்லம் பயன்படுத்தப்படுகிறது.
எடை இழப்பு திட்டத்தில் சர்க்கரைக்கு மாற்றாக வெல்லம் இருந்தாலும் அதிகப்படியாக எடுக்க விரும்பினால் இது நிச்சயம் உதவாது. வெல்லம் நல்ல ஊட்டச்சத்துக்களை கொண்டிருந்தாலும் குறைந்த கலோரிகளுடன் உள்ள ஊட்டச்சத்துக்கள் மீது நீங்கள் கவனம் திரும்பலாம்.
நீரிழிவு நோயை கொண்டிருப்பவர்களுக்கு சர்க்கரைக்கு மாற்றாக வெல்லம் சேர்க்க அறிவுறுத்தப்படுகிறது. (நீரிழிவு கட்டுக்குள் வைத்து மிதமான இனிப்பு எடுக்கும் போது) இயல்பாகவே இனிப்புக்கு சர்க்கரைக்கு மாற்றாக வெல்லம் பரிந்துரைக்கப்படுகிறது.
நீரிழிவு இருக்கும் போது வெல்லம் தொடர்ந்து சேர்ப்பது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். 10 கிராம் வெல்லத்தில் 9.7 கிராம் சர்க்கரை அளவு உள்ளது. அதனால் நீரிழிவு கட்டுக்குள் இருந்தாலும் கவனமாக வெல்லம் சேர்க்க வேண்டும்.
வெல்லத்தை பயன்படுத்துவதற்கு முன்பு அதை சுத்தம் செய்வது அவசியம். வெல்லம் புதிதாக தயாரிக்கப்படும் போது அதை எடுத்துகொண்டால் வயிற்றுப்போக்குக்கு வழிவகுக்கும். சிலர் புதிதாக தயாரிக்கும் வெல்லத்தை பயன்படுத்துவதால் அது மலச்சிக்கலை உண்டாக்கவும் செய்யலாம். எப்போதும் வெல்லத்தை பழையதாக்கி எடுக்க வேண்டும்.