மலச்சிக்கல் பிரச்சினையை முற்றிலும் நீக்கும் அதிமதுரப் பொடி !!

மலச்சிக்கல் பிரச்சினையை முற்றிலும் நீக்கும் அதிமதுரப் பொடி !!

அதி + மதுரம் = அதிமதுரம். மிகுந்த இனிப்புச் சுவை உடைய மூலிகை என்பது இதன் பொருள். இதன் வேர்கள் மிகுந்த இனிப்புச் சுவை கொண்டவை, மற்றும் குளிர்ச்சி தன்மை உடையவை.

கண் நோய்கள், எலும்பு நோய்கள், மஞ்சள் காமாலை, இருமல், சளி, தலைவலி, புண் போன்றவற்றைக் குணப்படுத்தக் கூடியது  அதிமதுர வேர். காக்கை வலிப்பு, மூக்கில் ரத்தம் வடிதல், படர்தாமரை, விக்கல், அசதி, தாகம் போன்றவற்றையும் கட்டுப்படுத்தும். 

நரம்புத் தளர்ச்சி மற்றும் ஆண்மைக் குறைவுப் பிரச்சினைக்கும் அதிமதுரம் மருந்தாகப் பயன்படுகிறது.

அதிமதுரம், வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டது. அதிமதுரத்தில் காணப்படும் பசைப் பொருளும், பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிமானம் அடைய உதவுகிறது.

அதிமதுர வேரின் சிறு துண்டுகளை பாலுடன் சேர்த்து அரைத்து, அதனுடன் சிறிது குங்குமப்பூ போட்டு கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை தலையில் வழுக்கை இருக்கும் இடத்தில் தடவி வந்தால் சில வாரங்களில் வழுக்கை தலையிலும் முடிகள் தோன்றும்.

சிறுநீர் மற்றும் வயிற்று கோளாறுகளுக்கு சிறந்தது. அதிமதுர கஷாயமானது பேதி மருந்தாகவும், சிறுநீரகக் கோளாறுகளுக்கும், மார்பு மற்றும் வயிறு சம்பந்தமான கோளாறுகளுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது.

அதிமதுரப் பொடியை வெல்லத்துடன் தண்ணீரில் கலந்து குடித்தால் மலச்சிக்கல் பிரச்சினை சரியாகும். திராட்சை, அதிமதுரம் இவற்றின் கஷாயத்துடன் காய்ச்சிய பாலைப் பருகச் செய்தால், சிறுநீரகத் தடையால் தோன்றிய வயிறு உப்புசம், வயிற்று பொருமல் போன்றவை நீங்கும்.