சர்க்கரை நோய்க்கு பச்சிலை வைத்தியம்

சர்க்கரை நோய்க்கு பச்சிலை வைத்தியம்

   தொட்டால் சிணுங்கி மூலிகையை வேருடன் பிடுங்கி நிழலில் உலர்த்தி இந்த மூலிகையின் வேரை தனியாகவும் இதன் இலையை தனியாகவும் பொடி செய்து இவை இரண்டையும் சம அளவாக கலந்து 

   தினம் காலை மாலை இரு வேளையும் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வர எந்த மருத்துவத்திற்கும் கட்டுப்படாத சர்க்கரை நோயானது இந்த பச்சிலை வைத்தியத்திற்கு கட்டுப்படும்

  மேலும் சர்க்கரை நோயால் ஏற்படும் ஆண்மை குறைவு கை கால் எரிச்சல் வெகு மூத்திரம் போன்ற நோய்கள் வெகு எளிதாக குணமாகிவிடும்

சர்க்கரை நோய்க்கு சவாலான மூலிகை மருந்து செய்ய தேவையான பொருட்கள்
 
ஓரிதழ் தாமரை இலை
கொழுந்து வேப்பிலை
சிறு கட்டுக்கொடி இலை
நற் சங்கன் இலை

  இவை நான்கையும் பசும் இலைகளாக பறித்து சம அளவாக எடுத்து கல்வத்திலிட்டு மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு சிறுசிறு உருண்டைகளாக செய்து கொண்டு இதை காலை மாலை இருவேளையும் தொடர்ந்து இரு உருண்டைகள் வீதம்  விழுங்கி விட்டு பசும்பால் அருந்தி வர தீராத சர்க்கரை நோயானது ஒரே மாதத்தில் தீர்ந்துவிடும்

  உணவில் உப்பு புளி காரத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்

சர்க்கரை நோயை சமப்படுத்தும் எளிய மூலிகை சூரணம் செய்ய தேவையான பொருட்கள்

சிறுகுறிஞ்சான் 
நெல்லிக்காய் 
வெந்தயம் 
மஞ்சள்

      இவை நான்கையும் சம அளவாக பொடி செய்து இதில் மூன்று கிராம் எடுத்து காலை மாலை இருவேளையும் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வர சர்க்கரை நோயானது சமநிலைக்கு வந்துவிடும்

 ஒரு முக்கிய குறிப்பு

    சர்க்கரை நோய் இருப்பவர்கள் உணவை மென்று தின்பது அவசியம் அதிலும் சம்மணம் போட்டு அமர்ந்து உணவை சாப்பிட்டால் சாப்பிடுகின்ற உணவு எளிதாக ஜீரணமாகும்

   சம்மணம் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் வயிற்றுப் பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும இதனால் சாப்பிடுகின்ற உணவு வகைகள் சாதாரணமாக ஜீரணமாகிவிடும் இதனால் கல்லீரலில் பாதிப்பு ஏற்படாது இதை கவனத்தில் கொள்ள வேண்டும் 

முக்கியமாக மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

   இதை பின்பற்றினால் போதும் சவாலாக இருக்கும் சர்க்கரை நோயை சாதாரணமாக வென்று விடலாம்.