முகத்தில் வழியும் எண்ணெய் பசையை போக்க டிப்ஸ்!

முகத்தில் வழியும் எண்ணெய் பசையை போக்க டிப்ஸ்!

முகத்தில் உள்ள அழகை கெடுக்கும் பிரச்னைகளில் ஒன்று எண்ணெய் பசை. இதனை போக்க நம்மில் பலரும் சோப்பு கொண்டு முகத்தை கழுவி இருப்போம்.

அப்படி நாம் செய்தாலும் கொஞ்சம் நேரத்திற்கு மட்டுமே மாற்றம் இருக்கும். ஆனால் இதனை முழுமையாக எளிய முறையில் போக்க உதவும் சில குறிப்புகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தக்காளி :
தக்காளியை நன்றாக சாறு பிழிந்து அதை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து முகத்தை கழுவினால் எண்ணெய் பசை நீங்கி முகம் பளிச்சென மாறும்.

ரோஸ் வாட்டர் :
தினமும் ரோஸ் வாட்டரைக் கொண்டு முகத்தை துடைத்து வந்தால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை விலகி முகம் பளிச் என்று மாறும்.

வெள்ளை வினிகர் :
வெள்ளை வினிகரை நீரில் கலந்து, முகத்தைத் துடைத்து வந்தால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகம் பொலிவுடன் மாறும்.

புதினா :
சிறிது புதினா இலைகளை நன்கு கழுவி நீரில் கொதிக்க வைத்து அந்நீரை குளிர வைத்து, அதை கொண்டு முகத்தைத் துடைத்து வந்தால் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தலாம்.

வெள்ளரிக்காய் :
வெள்ளரிக்காயில் சிறிதளவு தயிர் கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ எண்ணெய் பசை நீங்கி அழுக்குகளும் நீக்கப்படும்.

ஐஸ் கட்டி :
ஐஸ் நீர் அல்லது ஐஸ் கட்டிகளைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி சருமத்துளைகள் இறுக்கப்பட்டு, எண்ணெய் பசை வெளிவராமல் தடுக்கலாம்.

எலுமிச்சை :
எலுமிச்சையை சாறு பிழிந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, கழுவி வர எண்ணெய் பசை மாறும்.

கற்றாழை :
கற்றாழையின் ஜெல்லை மட்டும் எடுத்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவி வர முகம் பளிச்சென்று மாறும்.

வேப்பிலை :
வேப்பிலையை அரைத்து சாறு எடுத்து, அதனை நீரில் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவி வர முகப்பரு மற்றும் எண்ணெய் பசை விலகும்.

வெள்ளைக் கரு :
முட்டையின் வெள்ளைக் கருவை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவி வர எண்ணெய் பசை விலகி முகம் பளிச்சென மாறும்.