உலர்ந்த அத்திப் பழத்தை பாலுடன் சேர்த்து சாப்பிடுவதால் வரும் நன்மைகள்

உலர்ந்த அத்திப் பழத்தை பாலுடன் சேர்த்து சாப்பிடுவதால் வரும் நன்மைகள் 

உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. இதில் எண்ணற்ற மருத்துப்பயன்கள் நிறைந்துள்ளது.

இதில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, தாமிரம் மற்றும் வைட்டமின் ஏ மற்றும் பி போன்ற வைட்டமின்கள் உள்ளன. அத்தி பழம் இருவகைப்படும். இவற்றை சீமை அத்தி மற்றும் நாட்டு அத்தி என்று குறிப்பிடுவார்கள்.

பழங்கள் கொத்துக் கொத்தாக மரத்தின் பல்வேறு இடங்களிலும் காய்த்துத் தொங்கும். ஒரே அத்தி மரத்தின் 180 முதல் 300 அத்தி பழங்கள் வரை காய்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அத்திப்பழங்களைப் பச்சையாகவோ அல்லது உலர் வைத்தோ சாப்பிடுவதால் பல நல்ல பயன்கள் கிட்டும்.

அந்தவகையில் தற்போது உலர்ந்த அத்திப்பழத்தினை எப்படி சாப்பிட்டால் என்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என்று இங்கு பார்ப்போம். 

எப்படி எடுத்து கொள்ளலாம்?

இந்த அற்புதமான அத்தி பழத்தை பல வகையாக நம் உணவில் நாம் எடுத்துக் கொள்ளலாம். இவற்றை வெயிலில் உலர வைத்தோ அல்லது அப்படிவோ உண்ணலாம்.

ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும் இந்த பழத்தை முந்திரியுடன் சேர்த்து ஒரு மில்க் ஷேக்காக பருகலாம். இதனை செய்வதற்கு அத்தி பழத்தை நன்றாக ஊறவைத்து பின் அதனுடன் முந்திரி மற்றும் பால் சேர்க்க வேண்டும் 

நன்மைகள் :

* பொட்டாசியம் நிறைந்த, அத்திப்பழம் இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.

* செரிமான அமைப்பு அதன் சிறந்த நிலையில் இருப்பதை உறுதி செய்கிறது.

* இந்த உணவு நார்ச்சத்துகள் உங்கள் வயிற்றை எளிதில் நிரப்பவும், நீண்ட நேரம் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும், குடல் இயக்கத்தை தூண்டவும் உதவுகின்றனது.

* அத்திப்பழத்தில் உள்ள பினோல், ஒமேகா -3 மற்றும் ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் இருதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.இந்த கொழுப்பு அமிலங்கள் கரோனரி இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் ட்ரைகிளிசரைடுகளில் ஒரு தடுப்பு விளைவைக் கொண்டிருக்கிறது, இதனால் அவற்றின் ஒட்டுமொத்த எண்ணிக்கையும் குறைகிறது.

* எடை இழப்பில் முக்கிய பங்கு வகிக்கும் அத்திபழம், பொதுவாக உடல் பருமனான நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், பாலுடன் எடுத்துக் கொள்ளும்போது அது பாதகமான விளைவைக் கொண்டிருக்கிறது மற்றும் எடை அதிகரிப்பையும் ஏற்படுத்தும்.