நீலி அவுரி மூலிகை மகிமை

நீலி அவுரி மூலிகை மகிமை

"ஆத்தாடி அவள் நீலியடி
அறுபத்து நான்கு பேருக்கும் அவள் காளியடி"

என்பது சித்தர்கள் பாடல் (அறுபத்து நான்கு என்பது பாஷாணங்களின் வகைகளாகும்).

நீலி (அவுரி) மருத்துவ குணங்கள்.


1.விஷம் அருந்தியவர்களுக்கு கொடுக்க உயிர் பிழைப்பார்கள்.

2.எலி கொல்லி பேஸ்ட் சாப்பிட்டவர்களுக்கு கொடுக்க உயிர் பிழைப்பார்கள்.

3.பீர், பிராந்தி மற்றும் புகையிலை சார்ந்த பழக்கம் உள்ளவர்களுக்கு வாரம்  இரண்டு நாட்கள் கஷாயம் வைத்து கொடுக்க அதனால் ஏற்படும் எதிர்கால தீமைகள் (நோய்கள்) தடுக்கப்படும்.

4.ஆங்கில மருத்துவத்தில் இருந்து சித்த மருத்துவத்திற்க்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு நீலி கஷாயம் ஐந்து --ஏழு நாட்களுக்கு கொடுத்து பின் பேதி மருந்து கொடுத்து சிகிச்சை தர நோயாளிக்கு சித்த மருந்தால் முழு பலன் ஏற்படும். நோய் முழுவதுமாக நீங்கும்.

5.அனைத்து விதமான விஷக்கடிகளுக்கும் கஷாயமிட்டு கொடுக்க விஷங்கள் தீரும்.

6.சித்த மருந்துகளில் பாஷாண மருந்து கொடுத்து அதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு கஷாயம் செய்து காலை-மாலை என மூன்று -ஐந்து நாட்கள் தர பாஷாண வீறுகள் நீங்கும்.

7.இதன் இலையை அரைத்து கொட்டை பாக்களவு 100 மில்லி வெள்ளாட்டு பாலிலோ (அ) நாட்டு மாட்டுப்பாலிலோ தினம் காலை ஒரு வேலையாக மூன்று நாள் தர மஞ்சள் காமாலை குணமாகும்.

8.இடு மருந்தின் கெடுதல்கள் விலகும்.

9.தேகம் பொன் மேனியாக மாறும்.

10.அவுரி கற்பம் என்று ஒரு முறை உள்ளது.அதை செய்து சாப்பிட்டு வர உதிரக்கட்டு, கீல் வாதம் போன்றவை தீரும்.

முக்கிய குறிப்பு :-

இந்த மருந்தை உபயோகம் செய்யும் நோயாளிகளுக்கு எவ்விதமான ஆங்கில மருந்துகளும் வேலை செய்யாது.

எனவே,உயர் இரத்த அழுத்தம் (HIGH BP),

சுவாச இழுப்பு (ASTHMA) ,

சிறு நீரகம் செயலிழப்பு (KIDNEY FAILURE)

சர்க்கரை நோயாளிகள்
(SUGAR )

இது போன்று நோய்களுக்கு ஆங்கில மருந்து எடுப்பவர்களுக்கு கொடுக்க வேண்டாம்.

அவர்கள் சாப்பிட்டு வந்த மருந்துகள் செயலிழந்து நோய் அதிகரித்து விடும்.

மீண்டும் அவர்கள் ஆங்கில மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்தாலும் நோய் குறையாது.

மிகுந்த கவனத்துடன் நீலி (அவுரி) யை பயன்படுத்த வேண்டும்.


கஷாயம் செய்யும் முறை:-

நீலி வேர் 10கிராம்

சுக்கு 10 கிராம் (அ) மிளகு 10 கிராம்

தண்ணீர் 200 மில்லி

சிறுதீயில் கொதிக்க விட்டு 50 மில்லியாக வடிகட்டி காலை வெறும் வயிற்றில் கொடுக்கவும்.

வாழ்க சித்தர்களின் புகழ்!