வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் நீக்கும் பூனைக்காலி விதைகள் !!

வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் நீக்கும் பூனைக்காலி விதைகள் !!

பூனைக்காலி விதையை நன்றாக பொடி செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதனை அரை கிராம் அளவு எடுத்து பாலில் சேர்த்து அருந்தி வருவதன் மூலமாக ஆண்மை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் சரியாகும். மேலும் நரம்பு தளர்ச்சி போன்ற பிரச்சினைகளும் சரியாகும்.

பூனைக்காலி விதை, ஜாதிபத்திரி, சமுத்திரப்பச்சை சூடம் வசம்பு ஆகியவற்றை சரியான அளவு எடுத்து தினசரி இரண்டு வேலைகள் அதாவது காலை மாலை என அரை கிராம் முதல் ஒரு கிராம் வரை பாலுடன் சேர்த்து குடிப்பதன் மூலமாக ஆண்மை பெருகும்.

பூனைக்காலி விதை, சுக்கு, திப்பிலி, கிராம்பு, வெண் சித்திர மூலம், வேர்ப்பட்டை பூனைக்கண் குங்கிலியம், இவற்றை எடுத்து அதனுடன் நீர் சேர்த்து நன்றாக அரைக்கவும். அதனை சிறு மாத்திரை அளவு உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

தினசரி ஒரு மாத்திரை வீதம் காலை மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வருவதன் மூலமாக வயிற்றிலுள்ள புழுக்கள் குன்மம் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும்.

பூனைக்காலி வேரினை முறையான வகையில் கசாயம் செய்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை சாப்பிட்டு வருவதன் மூலமாக ஜுரம், வாதம், பித்தம், கபம் போன்ற நோய்கள் குணமாகும்.

பூனைக்காலி வேரினை நன்றாக அரைத்து யானைக்கால் பிரச்சினை உள்ளவர்கள் பற்றுப்போட்டு வருவதன் மூலமாக நல்ல பலன் கிடைக்கும்.