வேக வைத்த முட்டைக்கோஸ் நீரை மறந்தும் கொட்டிடாதீங்க!! படிங்க!

வேக வைத்த முட்டைக்கோஸ் நீரை மறந்தும் கொட்டிடாதீங்க!! படிங்க!

முட்டைக் கோஸ்- எல்லாருக்கும் பிடித்த காலிஃப்ளவரின் இன்னொரு ஜெராக்ஸ் போல் சொல்லலாம். அதனை காலிஃப்ளவர் போலவே சமைத்து சாப்பிட்டால் இரண்டிற்கும் வித்தியாசம் தெரியாது.

சத்தில் மட்டும் சாதரணமா முட்டை கோஸை நினைச்சுடாதீங்க. இதிலிருக்கும் அதி சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட், புற்று நோயை முற்றிலும் எதிர்க்கக் கூடியது என உங்களுக்கு தெரியுமா?

அதில் நீங்கள் ஆச்சரியப்படும் வகையில் சத்துக்கள் உள்ளது. ஆனால் இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம், முட்டைகோஸ் இலையிலையாய் பிரித்து கழுவுவது நல்லது. ஏனென்றால் இது விளையும்போது உருவாகும் ஒவ்வொரு இலைக்கும் மருந்தை தெளிப்பார்களாம். இல்லையென்றால் அது பூச்சி அரித்து விடும் என்பதற்காக இப்படி செய்கிறார்கள்.
 
ஆகவே மஞ்சள் போட்ட சுடுநீரில் சில நிமிடங்கள் வைத்த பிறகு அதனை நீங்கள் உபயோகிக்கலாம்.

முட்டைக் கோஸ் வேக வைத்த நீர் : நீங்கள் வழக்கமாக என்ன செய்வீர்கள். முட்டைக் கோஸை வேக வைத்த பின் அந்த நீரை வடிக்கட்டி அதன் பின் சமைப்பீர்கள். ஆனால் உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? அந்த வேக வைத்த நீர் பலவித உடல் பிரச்சினைகளை சரிசெய்கிறது. எனென்றால் மிக முக்கியச் சத்துக்கள் அந்த வேக வைத்த நீரில் கரைந்து விடும். அதனை நீங்கள் வடிகட்டிவிட்டால் உங்கள் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போய் விடும்.

மது குடிப்பீர்களா? 
நீங்கள் மது குடிப்பவர்கள் என்றால் இந்த முட்டைக் கோஸ் நீர் உங்களுக்கு ஒரு அருமருந்து. குடிப்பவர்களுக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டிருக்கும். விஷத்தன்மை அதிகம் உண்டாகியிருக்கும். நல்ல பாக்டீரியாக்கள் குறைந்திருக்கும். அவர்கள் இந்த முட்டைக் கோஸ் நீரை குடிக்கும்போது கல்லீரல் பாதிப்பை குணப்படுத்தலாம். விஷத்தன்மையை சரி செய்யலாம்.

அல்சரை குணப்படுத்தும் : 
வயிற்று அல்சரால் அவதிப்படுபவர்கள் இந்த முட்டை கோஸ் வேக வைத்தன் நீரை தினமும் குடியுங்கள். உங்கள் வியாதி பறந்து போகும். உணவுக்குடல் அல்சர், இரைப்பை அல்சர் வேகமாக குணமாகிறதாக ஆய்வு தெரிவிக்கின்றது.

சரும நிறத்தை அதிகரிக்கும் : சிலருக்கு சருமம் பொலிவாக இல்லாமல் டல்லாகவே இருக்கும். இந்த முட்டை கோஸ் நீரை தினமும் குடித்தால் தேகத்தில் மினுமினுப்பு கூடும். கரும்புள்ளி, முகப்பருக்கள் மறையும். நிறம் கூடும்.

வளமான கூந்தலுக்கு : 
கூந்தலுக்கு தேவையான புரதம் மற்றும் கோலாஜன் இந்த நீரில் இருப்பதால் இது கூந்தலுக்கு இயற்கையாக போஷாக்கு அளிக்கும். இதனால் அடர்த்தியாக கூந்தல் பெறுவீர்கள். முடி உதிர்தல் பாதிப்பு குறையும்.

பல் சொத்தை : 
சிலருக்கு பற்கள், ஈறுகள் பலமில்லாமல் வலுவிழந்து அடிக்கடி பல்வலி, வீக்கம் வந்தபடி இருக்கும். அவர்கள் இந்த நீரை வாயில் அரை நிமிடம் வரை வைத்து பின் குடிக்கவும். இதனால் நாளடைவில் பல் சொத்தை, வீக்கம், வலி ஆகியவை குணமாகும்.

மார்பக புற்று நோய் : 
அந்த நீரில் இருக்கும் சல்ஃபர் மற்றும் ல்யூடின், போன்ற அற்புத மூலக்கூறுகள் பெண்களுக்கு மிக அவசியமான சத்துக்கள் . இவை மார்பக புற்று நோயை வரவிடாமல் தடுக்கின்றது.

கொழுப்பை கரைக்கும் : 
உடலில் ஏற்படும் கெட்ட கொழுப்புகளை கரைக்கும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்டுகள் பெற்றுள்ளன. இவை இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்கிறது. உடல் பருமனை குறைக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை இரட்டிப்பாக்கும் :
நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான விட்டமின் சி அதிக அளவில் இந்த நீரில் இருக்கிறது. ஏனென்றால் விட்டமின் சி நீரில் கரையும் தன்மை உள்ளது என்பதால் முட்டை கோஸ் வேக வைத்த நீரில் அதிகப்படியான விட்டமின் சி இருக்கும்.

எலும்பு பலம் : 
இந்த நீரில் விட்டமின் கே அதிக அளவு இருப்பதால் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. வயதான பின் உண்டாகும் எலும்பு தேய்மனம், மூட்டு வலி போன்றவை இதிலிருந்து காக்கப்படுகிறது.

கண் பார்வை : 
இந்த நீரை அடிக்கடி குடித்தால் கண் பார்வைக் கோளாறுகள் குணமாகும். கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும். இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு சிறந்தது.

மலச்சிக்கலுக்கு : 
உடல் சூட்டைத் தணிக்கும். நாள்பட்ட மலச்சிக்கலைப் போக்கும். குடலில் உருவாகும் தொற்றுகளை நீக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும். மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும். அஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை நீக்கும்.

வெறும் வயிற்றில் இந்த முட்டை கோஸ் நீரை குடிப்பதால் வரும் நன்மைகள் : குடலில் ஏற்படும் நோய் தொற்றுகளை சரி செய்து குடலின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும். இதற்கு காரணம் இதில் உள்ள லாக்டிக் அமிலம் தான். முட்டைக்கோஸ் நீர் சுவாச பாதையில் உள்ள அழற்சியை சரிசெய்கிறது. மூச்சுகுழாய் அழற்சி, ஆஸ்துமா போன்ற பிரச்சனையை சரி செய்யும்

நோய்கள் தீரும் : 
உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்கிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தை சீராக்கி நோய்க்கிருமிகளின் தாக்கத்தை குறைக்கிறது. செரிமான மண்டலத்தை சீராக்க உதவுகிறது.

முட்டை கோஸ் நீரில் இருக்கும் மிக முக்கிய சத்துக்கள்: விட்டமின் பி-5 வைட்டமின் பி-5, வைட்டமின் பி-6, வைட்டமின் பி-1 போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும் முட்டைக்கோஸில் நிறைந்துள்ளது. இவை உடலின் செயல்களுக்கு இன்றியமையாத சத்துக்கள்.

பொட்டாசியம் : 
பொட்டாசியம், மாங்கனீசு, இரும்பு, மக்னீசியம் போன்ற தாதுஉப்புக்கள் முட்டைக்கோசில் உள்ளது. பொட்டாசியம் உடற்செல்கள் மற்றும் சருமம் வளவளப்புடன் இருக்க துணை செய்யும். இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதிலும் பங்கெடுக்கும்.

விட்டமின் கே : 
அல்சீமர் மற்றும் நரம்பு வியாதிகளின் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் ஆற்றலும் ‘வைட்டமின் கே’ -விற்கு உண்டு. இந்த விட்டமின் கே முட்டை கோஸ் நீரில் அதிகம் இருக்கிறது.

இரும்புச் சத்து : 
இதில் அதிக ஃபோலிக் அமிலம் இருப்பதால் கருவுற்ற தாய்மார்கள் அவசியம் குடிக்கவும். ஏனென்றால் இது கருவில் உருவாகும் குறைபாடுகளை சரிப்படுத்துகிறது.

பாஸ்பரஸ் : 
பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும். இதனால் பெண்களை அதிகம் தாக்கும் ஆஸ்டியோஃபோரோஸிஸ் வராமல் தடுக்கலாம்.

டார்டானிக் அமிலம் : 
முட்டைகோஸில் டார்டரானிக் என்ற ஒரு வகை அமிலம் உள்ளது அது தேவைக்கதிகமாக உள்ள கார்பஹைட்ரேட்டை கொழுப்பாக மாறாமல் இருக்க செய்கிறது எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இது ஒரு பயனுள்ள உணவாக இருக்கும்.

ஒமேகா 3 : 
மீனில் இருப்பது போலவே ஒமேகா-3 முட்டைக் கோஸிலும் இருக்கிறது. இது மூளை வளர்ச்சியைத் தூண்டுகிறது. இதனால் அறிவாற்றல் அதிகமாகும்..