உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் சாத்துக்குடி !!

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் சாத்துக்குடி !!

சாத்துக்குடி பழம் சிட்ரஸ் வகை பழங்களில் ஒன்றாகும். நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். உடல் வலு பெறும். 

சாத்துக்குடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும்.

மலச்சிக்கல் வராமல் தடுப்பதற்கு பழங்களே சிறந்த மருந்தாகும். மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் ஒரு சாத்துக்குடி பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினை விரைவில் நீங்கும்.

சாத்துக்குடி பழத்தில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு சாத்துக்குடியை பழமாகவோ, சாறாகவோ கொடுப்பது மிகவும் நல்லது.

சாத்துக்குடி காய்ச்சல், அம்மை, பேதி, சளி, இருமல் என எல்லா நோய்க்கும் நல்ல பலத்தை கொடுக்கும். சாத்துக்குடியில் வைட்டமின்  சி அதிகம் உள்ளதால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

சாத்துக்குடி அதிகளவு சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவாகும்.  சாத்துக்குடி சாறு சாப்பிட்டு வர மூட்டுவாதம், எலும்பு பலவீனம் நீங்கும்.

சாத்துக்குடி சாறுடன் தண்ணீர் சேர்த்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடிக்கு நல்ல ஊட்டம் கிடைக்கும். மேலும் தலையில் ஏற்படும் பொடுகை போக்கும்.