திரிபலா மாத்திரை செய்முறை மற்றும் பலன்கள் :
திரிபலா மாத்திரை செய்முறை மற்றும் பலன்கள் :
தேவையான பொருட்கள் :
கடுக்காய்த் தோல் – 100 கி
தான்றிக்காய்த் தோல் – 100 கி
நெல்லி வற்றல் – 100 கி
சுருங்காலி – 35 கி
வேங்கை – 35 கி
அயச் செந்தூரம் – 30 கி
சிலாசத்துப் பற்பம் – 50 கி
சங்கு பற்பம் – 50 கி
செய்முறை :
ஆகியவற்றை நன்கு பொடி செய்து தண்ணீர் சேர்த்து சிறு சிறு மாத்திரைகளாக செய்து நன்கு காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.
2 மாத்திரைகள் இரண்டு அல்லது மூன்று வேளை உணவுக்குப்பின் சாப்பிட குடற்புண், குடல் எரிச்சல், நெஞ்செரிச்சல், தொண்டைப்புண், வாய்ப் புண் தீரும். நீண்ட நாட்கள் தொடர்ந்து உபயோகித்து வர உடல் உள்ளுறுப்புகளின் செயல் திறனை ஊக்குவித்து நீடித்த உடல் நலத்தைக் கொடுக்கும். காயகற்ப மருந்தாகப் பயன்படும். முக்குற்றத்தால் ஏற்படும் நோய்கள் தணிக்கும்