வலியின் தன்மைகள்.
வலியின் தன்மைகள்.
மனித உடலில் உருவாகும் ஒவ்வொரு நோயும் உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் வலியை ஏற்படுத்துகிறது.
இந்த வலி ஒரே மாதிரியாக உணரப்படுவதில்லை, அதேபோல ஒரே காரணத்தாலும் வலி உருவாவதும் இல்லை.
பல்வேறு காரணங்களால் உடலில் வலி ஏற்படுகிறது, நோய் காரணிகளுக்கு ஏற்ப அந்த வலியின் தன்மையும் மாறுபடுகிறது.
தொடர்ந்து வலி நிவாரணி மாத்திரைகள் எடுத்தாலும் கூட பலருக்கு நிரந்தமாக வலி நீங்குவதில்லை. இன்னும் சொல்லப்போனால் பலருக்கு வலி ஏற்படும் காரணம் என்னவென்றே ஆங்கில மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடிவதில்லை, scan, X-ray போன்ற நவீன சோதனைகளும் கூட இந்த வலி விஷயத்தில் தோற்றுப்போகிறது.
உதாரணமாக ஒரு சிலருக்கு உடலில் ஏதோ ஒரு இடத்தில் கடுமையான வலி இருக்கும், ஆனால் scan செய்து பார்த்தால் அங்கே பிரச்சினை ஏதும் இருக்காது.
இது போன்ற பல்வேறு வகையான வலிகள் பற்றியும் அது எதனால் ஏற்படுகிறது என்பதை பற்றியும் பழமையான சீன அக்குபங்சர் நூலான "The Yellow Emperor’s Classic of medicine" இல் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
வலி பற்றியும் அது உருவாகும் காரணம் பற்றியும் விளக்க முடியுமா? என்ற மஞ்சள் பேரரசர் Huang Di'யின் கேள்விக்கு மந்திரியார் Qi Bo கீழ்க்கண்டவாறு பதிலளிக்கிறார்.
Qi மற்றும் இரத்தம் ஆகியவை உடலிலும் சக்தியோட்ட பாதைகளிலும் தொடந்து பாய்ந்துகொண்டு இருக்கிறது, இவை குளிர் (cold) நோய்க்காரணியால் தாக்கப்படும் போது இரத்தம் மற்றும் Qi தேக்கமடைகிறது.
சக்தியோட்ட பாதைகளுக்கு சுற்றியுள்ள பகுதிகளில் குளிர் தாக்கும் போது இரத்த ஓட்டம் குறைகிறது.
அதேவேளையில் குளிரானது சக்தியோட்ட பாதைக்கு உள்ளே ஊடுருவும்போது இரத்தம் மற்றும் Qi தேக்கமடைந்து வலியை உண்டாக்கும்.
சில நேரங்களில் ஒரு நபருக்கு வயிற்று வலி தானாகவே குறையும். சில நேரங்களில் வலி தொடர்ந்து இருக்கும்.
சிலருக்கு வலி உள்ள இடத்தை தொட்டால் வலி அதிகரிக்கிறது,
சிலருக்கு தொட்டால் வலி குறைகிறது.
சில வயிற்று வலி கைகள்வரை பரவுகிறது. சில வலி எபிகாஸ்ட்ரிக் பகுதியில் தொடங்கி முதுகுபக்கம் ஊடுருவுகிறது. சில வலிகள் ஹைபோகாண்ட்ரியத்தில் இடம்பிடித்து அடிவயிற்றுக்கு பரவுகிறது. சில வயிற்று வலி இடுப்பு, பிறப்புறுப்பு அல்லது பிட்டம் வரை பரவுகிறது. சில நேரங்களில் வலி மயக்கத்தை ஏற்படுத்தும். சில வயிற்று வலிகள் வாந்தி மற்றும் பேதியை உண்டுபண்ணும், சில வலிகள் மலச்சிக்கலுக்கு காரணமாக இருக்கும். இப்படி பல்வேறு வகையான வலிகளை வேறுபடுத்தி பார்த்து அதற்கு தகுந்தாற்போல் சிகிச்சை அளிக்க வேண்டும்.
சக்தியோட்ட பாதைகளின் சுற்றுப்பகுதியில் குளிர் ஆக்கிரமிக்கும்போது, அது சக்தியோட்ட பாதைகளின் இணைப்புபாதைகளில் சுருக்கத்தை ஏற்படுத்தி வலியை ஏற்படுத்துகிறது.
இது போன்று குளிரால் ஏற்பட்ட வலிகள் இருக்கும் இடங்களில் வெப்பத்தை கொடுத்தால் அங்கே yang தன்மை அதிகரித்து இணைப்புப் பாதைகள் விரிவடைந்து வலி நீங்குகிறது.
சம்மந்தப்பட்ட நபர் தொடர்ந்து குளிர்ச்சியான சுற்றுச்சூழலில் இருக்கும் பட்சத்தில் வலி மீண்டும் வந்து நீண்டகால நோயாக மாறக்கூடும்.
சக்தியோட்ட பாதைகளுக்கு உள்ளே குளிர் (cold) நோய் காரணிகள் ஊடுவிவிட்ட பின்பு அது உடலில் yang qi யோடு எதிர்த்து போராடுகிறது, இதனால் சக்தியோட்ட பாதைகளில் தேக்கம் ஏற்பட்டு நிரம்புகிறது, இதனை மிகையால் (excess) பாதிக்கப்பட்டு உள்ளது என்று சொல்லலாம்.
இதுபோன்று மிகையால் பாதிக்கப்படுவதால் ஏற்படும் வலிகள் "மிகக்கடுமையாக"வும், குணப்படுத்த தாமதமாகும் நிலையிலும் இருக்கும். இவர்களுக்கு வலி உள்ள இடத்தை தொடலாம் என்ற உணர்வு ஏற்படும்.
சிறுகுடல் மற்றும் இரைப்பைக்கு இடையில் குளிர் நோய்க்காரணி தாக்கி இரத்தம் மற்றும் Qi தேக்கமடையும் போது, சிறிய இணைப்புப்பாதைகள் சுருங்கி மிதமான வலியை உண்டாக்கும்.
இவர்கள் வலி உள்ள இடத்தில் அழுத்தம் கொடுத்து தடவி விடும் போது இரத்தம் மற்றும் Qi யின் தேக்கம் குறைந்து வலியும் குறையும்.
இதேபோல் குளிர்ச்சியானது முதுகுப்புறம் உள்ள சக்தியோட்ட பாதைகளில் மிக ஆழமாக ஊடுரும்போது, தடவுதல், தேய்த்துவிடுதல், அழுத்தம் கொடுத்தல் போன்ற செயல்களால் வலி குறைவதில்லை.
எட்டு அசாதாரண சக்தியோட்ட பாதைகளில் ஒன்றான Chong mai'இல் குளிர் ஊடுரும்போது கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு அது கைகளிலும் பரவுகிறது.
குளிரானது பின்புறமுள்ள சக்தியோட்ட பாதைகளை தாக்கும்போது இரத்த தேக்கம் ஏற்பட்டு இரத்தசோகையை உருவாக்கும்.
இந்த இரத்த தேக்கத்தால் உருவாகும் வலி எபிகேஸ்ட்டிரியம் வரை பரவுகிறது.
கல்லீரல் சக்தியோட்ட பாதை குளிரால் பாதிக்கப்பட்ட நிலையில் ஹைப்போகாண்ட்ரியம் பகுதியில் வலி ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், பிறப்புறுப்பு மற்றும் மேல் தொடைப்பகுதி வரை வலி பரவுகிறது.
கல்லீரல், மண்ணீரல், இதயம், சிறுநீரகம் மற்றும் நுரையீரலை குளிர் தாக்கும் போது இவ்வுறுப்புகளுக்கு இடையே உள்ள தொடர்பு பாதிக்கிறது, Qi பாய முடியாமல் தேக்கமடைகிறது, yin மற்றும் yang இல் சமநிலையற்ற தன்மை உருவாகி மயக்கத்தை ஏற்படுத்துகிறது.
இரைப்பையில் குளிர் ஊடுரும்போது அது Qi யை கிளர்ச்சி அடையச்செய்து மேல் நோக்கி நகர்த்துகிறது, இதனால் வலியுடன் கூடிய வாந்தி ஏற்படும்.
சிறுகுடலை தாக்கும் போது Qi சரியாக நகராது, இதனால் சிறுகுடலின் சுருங்கி விரியும் தன்மை பாதித்து வயிற்றுப்போக்கு ஏற்படும்.
இதுவே வெப்பத்தால் சிறுகுடல் பாதிக்கும் போது காய்ச்சல், தாகம், பசியின்மை, உலர்ந்த மலம் போன்ற பிரச்சினைகள் உருவாகும்.
இது போன்று வலியின் தன்மைகளை உணர்ந்து சரியாக சிகிச்சை அளிக்கும் போது எப்பேர்ப்பட்ட வலிகளும் காணாமல் போகும். சீன அக்குபங்சர் சிகிச்சை முறையில் மிகக்கடுமையான வலிகளையும் நீக்க முடியும்.