குடற்புழுக்களால் அவதியா? இந்த மருந்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் போதுமே!
குடற்புழுக்களால் அவதியா? இந்த மருந்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் போதுமே!
குடலில் ஏற்படுகிற புழுக்களின் தாக்கம் என்பது ஒருவர் வாழுமிடம், உணவுப் பழக்கம், வயது ஆகியவற்றை எல்லாம் காரணமாக இருக்கிறது.
உங்களுக்கு குடல் புழுக்கள் பிரச்சினை இருந்தால், படாதபாடு பட வேண்டியிருக்கும். குடல் ஒட்டுண்ணிகளைக் கொல்ல பல ரசாயன மருந்துகள் உள்ளன.
ஆனால் பக்க விளைவுகள் இல்லாமல் குடல் புழுக்களை குணப்படுத்த இயற்கை வைத்தியத்தினால் தான் முடியும். தற்போது குடற்புழுக்களை விரட்ட உதவும் எளிய இயற்கை வைத்தியம் ஒன்றை இங்கே பார்ப்போம்.
தேவையான பொருள் :
பூசணி விதை - 100 கிராம்
தேன் - சிறிதளவு
செய்முறை :
முதலில் கொடுக்கபட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக் கொள்ளவும். பிறகு 100 கிராம் பூசணி விதைகளை சூரிய ஒளியில் நன்கு உலர வைத்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் இந்த பூசணி விதைகளை நன்கு அரைத்து பொடியாக்கி ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும். பிறகு பூசணி விதை பொடியை ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
இதனை தொடர்ந்து 5 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்றில் உள்ள குடற்புழுக்களை முற்றிலுமாக நீக்க முடியும்.
மற்றோரு வழி என்னவென்றால் பப்பாளி விதை அரைத்து பொடியாக்கி கொள்ளவும். அரைத்த பொடியையும் தேனுடன் சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் குடற்புழுக்களை முற்றிலுமாக நீக்க முடியும்.