சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் இளநீர் குடிக்கலாமா?

சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் இளநீர் குடிக்கலாமா?

 இளநீர் அற்புதமான ஆரோக்கியமான பானம். இது மற்ற பானங்களில் இல்லாத அளவு பல நன்மைகளை கொண்டிருக்கின்றது.

எனினும் உங்கள் ஆரோக்கியத்தை பொறுத்து இதை அளவாக எடுத்துக்கொள்வது நல்லது. ஏனெனில் ஒரு சில நேரங்களில் இதனை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது இது பக்கவிளைவுகளை ஏற்படும் என்று கூறப்படுகின்றது.

அந்தவகையில் தற்போது இளநீரை யாரெல்லாம் எடுத்து கொண்டால் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பார்ப்போம். 

விளையாட்டு வீரர்களுக்கு இது சிறந்த பானம் கிடையாது. ஏனெனில் இளநீரை காட்டிலும் இதில் சோடியம் அளவு அதிகமாக உண்டு. அதனால் வெற்று நீர் தான் சோடியத்துக்கு உதவுகிறது.

கலோரிகளை குறைக்க உடல் வியர்க்க பயிற்சி செய்யும் போது நீங்கள் இளநீர் குடிப்பது எதிர்மறையானது.

உங்களுக்கு தேங்காய் நீர் ஒவ்வாமை இருந்தால் அதிலிருந்து விலகி இருப்பதே நல்லது. ஏனெனில் இது ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தும். 

 இளநீர் அதிகமாக எடுக்கும் போது அது டையூரிடிக் பண்புகள் கொண்டுள்ளதால் அவை நன்மை அல்ல. இது நீரேற்ற பண்புகளை கொண்டிருந்தாலும் அதிகப்படியான நுகர்வு ஆரோக்கியமற்றதாக இருக்கலாம்.

இளநீரில் இருக்கும் அதிக பொட்டாசியம் அற்புதமான பானமாக காட்டப்படுகிறது. ஆனால் அதே காரணத்தால் இளநீர் அதிகமாக எடுப்பது ஆபத்தானது. 

 இளநீர் இயற்கையான மலமிளக்கியாக இருப்பதால் குடல் இயக்கத்தில் பிரச்சினை உள்ளவர்கள் அதிகப்படியாக இதை எடுக்க கூடாது. 

நீரிழிவு நோயாளிகள் தினசரி இதை குடிக்க கூடாது. தினசரி குடிக்க வேண்டிய பானமாக இளநீரை நினைக்க கூடாது.

இளநீர் உடலை குளிர்விக்கும். உஷ்ணமான உடலை கொண்டவர்களுக்கு சரி. ஆனால் எப்போதும் குளிர்ந்த உடலை கொண்டிருப்பவர்களுக்கு தினசரி எடுப்பது பொருந்தாது. 

இளநீர் இரத்த அழுத்தத்தை குறைக்கலாம். ஏற்கனவே உயர் இரத்த அழுத்தத்திற்கு மருந்துகளை எடுத்து கொண்டவர்கள் அடிக்கடி இளநீர் குடிக்கும் போது அது இரத்த அழுத்தத்தை அதிகமாக குறைக்க செய்யலாம்.