வாழ்நாள் முழுவதும் மாரடைப்பு வராமல் இருக்க வேண்டுமா?

வாழ்நாள் முழுவதும் மாரடைப்பு வராமல் இருக்க வேண்டுமா? 

இந்த வழிமுறைகளை கடைபிடித்தாலே போதும்!

உலகளவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம். நம் நாட்டில் ஆண்களானாலும், பெண்களானாலும் இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. 

இன்றைய சூழ்நிலையில் நமது உணவு பழக்க வழக்கம், இதர காரணிகளால் வயது வித்தியாசமின்றி மனித குலத்தை அச்சுறுத்துவது மாரடைப்பு நோயும் உள்ளது. 

மருத்துவ வளர்ச்சியால் இந்த நோய்க்கு உயர் சிகிச்சை முறைகள் வந்துவிட்டாலும், இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு நம்மில் பலருக்கு இல்லை என்பதே உண்மை.

நமது வாழ்நாளில் மாராடைப்பை சந்திக்காமல் இருக்க வேண்டும் என்றால் ஒரு சில இயற்கை வழிமுறைகளை பின்பற்றினாலே போதும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

சர்க்கரை பானங்கள், பழச்சாறுகளை தவிர்த்து அதற்கு பதிலாக தண்ணீர் அல்லது இனிப்பு சேர்க்கப்படாத பழச்சாறுகளை தேர்வு செய்து ஒரு ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற வேண்டும்.

நாள்தோறும் நாம் தேர்வு செய்த சைவ உணவுகள் மொத்த அளவை, 5 பாகங்களாக பிரித்து, அதில் சத்து நிறைந்த காய்கறி மற்றும் பழங்களை சேர்த்து உண்ண வேண்டும்.

உப்பு நிறைந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

தினமும் உடற்பயிற்சி குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் என வாரத்தில் 5 நாட்கள் செய்ய வேண்டும். மேலும் அன்றாட பணிகளில் நாம் சுறுசுறுப்புடன் இயங்க வேண்டும். 

புகை பிடிப்பதையும், புகையிலை பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.இதன் மூலம் உங்கள் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் செய்யக்கூடிய ஓர் சிறந்த செயலாகும். புகைப்பிடிப்பதை கைவிட்ட, 2 ஆண்டுகளுக்குள் இருதய நோய் ஏற்படும் அபாயம் கணிசமாக குறைகிறது.