வல்லக் கீரை

வல்லக் கீரை

வழக்கமாக பலர் ஒரு உணவுப் பொருள்களிலுள்ள நன்மைகளை மட்டுமே அனைவருக்கும் தெரியும்படி தண்டோரா அடித்து சொல்வார்களேயொழிய அந்த உணவுப்பொருள்களால் நம் உடலுக்கு ஏற்படும் தீமைகளைப் பற்றி யாரும் வாய்  திறப்பதே கிடையாது. இக்கீரையின் நன்மைகளை பகிர்ந்து கொண்ட நாம் இதிலுள்ள ஒருசில ஆபத்துகளையும் பகிர்ந்து கொண்டால்தான் சிறப்பாக இருக்கும் என கருதுகிறோம்.

          அந்த வகையில் இந்த வல்லக் கீரையின் உள்ளே ஒளிந்திருக்கும் ஆபத்தையும் இங்கு பார்ப்போம்.

          இந்த கீரை நீர்நிலைகளில் மிதந்தபடி வளர்வதால் ஒருசில ஆபத்துகளும் அதில் ஒளிந்துள்ளன. அது என்ன ஆபத்து எனில், இக்கீரையின் தண்டுகள் குழாய் போன்ற வடிவமுள்ளவை என்பதனை பார்த்தோமல்லவா அதனுள் சில நேரங்களில்  நீர்நிலையில் வாழ்கின்ற ஒருவிதமான மிக சிறிய நூல்போன்ற வடிவமுடைய அட்டை என்னும் உயிரினம் உள்நுழைந்து வாழ்க்கை நடத்துவதுண்டு.

          சாதாரண புழு, பூச்சியாக இருந்தால்கூட பரவாயில்லை வேக வைக்கும்போது இறந்து போவதோடு அதிலுள்ள புரோட்டீனும் நமக்கு எக்ஸ்ராவாக கிடைக்கிறதே என சிறிது ஆறுதலடையலாம். ஆனால் இதில் குடியிருப்பது இரத்தத்தை உறிஞ்சி அதன்மூலம் உயிரை குடிக்கும் அட்டைப்பூச்சி. எனவே சமைக்கும்போது தண்டினை தவிர்த்து விடலாம் அல்லது புழு பூச்சிகள் மற்றும் அட்டைகள் இருக்கிறதா என்று நன்கு ஆராய்ந்து அதன் பின் பயன்படுத்தவும். 

          ஏனெனில் இந்த வகை அட்டைகளின் நிறமோ பச்சை, அதன் வடிவமோ மிகச்சிறியதாக நூல்போல்தான் இருக்குமாம். எனவே எளிதில் கண்டறிவது கடினம். 

          அதுமட்டுமல்ல சாதாரண வெப்பநிலையில் இவைகள் இறப்பதில்லை. ஆதலால் அரை அவியலாக அவிக்கப்படும் உணவின்மூலம் உடலுக்குள் சென்றுவிட்டால் அவ்வளவுதான் அங்கு ஒரு புதுமனை புகுவிழாவையே நடத்திவிடும். அதன்பின் உங்கள் குடல்தான் அது வாசம்செய்யும் வசந்தமாளிகை.

          புது வீட்டில் பால்காய்த்து கிரகப்பிரவேசம் நடத்துகிறதோ இல்லையோ விரைவிலேயே உங்களுக்கு பாலூற்றும்படி செய்துவிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, இந்த கீரையை கவனமாக கையாளவும். அப்படி கவனமுடன் கையாளத் தெரியவில்லையெனில் தயவு செய்து இதனை உணவாகப் பயன்படுத்துவதை தவிர்த்து விடவும்.

          அல்லது, இது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் சத்து நிறைந்த கீரை என்பதாலும், உலகின் பலதரப்பட்ட மக்களால் விருப்ப உணவாக பரவலாக பயன்படுத்தப்பட்டு வருவதாலும் இதன் முக்கியத்துவம் கருதி, பாதுகாப்பற்ற குளம், குட்டை மற்றும் கழிவு நீரோடைகளில் தன்னிச்சையாக வளரும் கீரைகளை பயன்படுத்துவதை தவிர்த்து இதனை உங்கள் வீட்டு தோட்டங்களில் நீங்களே பயிரிட்டு பாதுகாப்பான முறையில் பயன்படுத்தவும்.

மற்றும் ஏராளமான சத்துக்கள் நிரம்பியுள்ளன.

பயன்கள்.

          இதை முறையாக உண்டுவர இரத்தத்தை சுத்திகரிப்பதோடு இரத்த சிவப்பணுக்களையும் பெருக்குகிறது. உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். கண்களையும் பாதுகாக்கும்.

          நோயெதிர்ப்பு சக்தியை தருவதோடு ஆண்மையையும் அதிகரிக்கும். குடற்புண் அகலும். மலச்சிக்கல் தீரும். எலும்பு மற்றும் பற்களின் உறுதிக்கு உதவுவதோடு தோல்களையும் மெருகூட்டுகிறது.

          குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இதை சாப்பிட்டுவர தாய்ப்பாலை பெருக்கும். இதை கருத்தில் கொண்டே "வள்ளல் தாய்போல் பிள்ளையை வளர்க்கும்" என்னும் பழமொழி இன்றும் வழக்கில் உள்ளது. மேலும் இது நரம்புத்தளர்ச்சி, சிறுநீரகக் கோளாறுகளையும் நீக்கும் தன்மை வாய்ந்தது.