அதிக நேரம் குளிப்பதால் என்ன நடக்கும் தெரியுமா? தெரிந்தே இந்த தவறுகளை செய்யாதீர்கள்...

அதிக நேரம் குளிப்பதால் என்ன நடக்கும் தெரியுமா? தெரிந்தே இந்த தவறுகளை செய்யாதீர்கள்...

தினமும் குளிப்பது அவசியம் தான். ஆனால் பல மணி நேரம் பாத்ரூமே கதி என்று தண்ணீரில் அமர்ந்திருப்பது என்பது தவறான ஒன்று. அவ்வாறு செய்தால் மேனி பட்டுப்போல் இருக்கும் என்று பலர் தவறுதலாக நினைத்து கொள்கின்றனர்.

அதுவும் குளிக்கும் போது செய்யக்கூடாத ஐந்து தவறுகள் குறித்து பார்க்கலாம்.

குளிர் காலத்தில் வெந்நீரிலும் வெயில் காலத்தில் குளிர்ந்த நீரிலும் குளிப்பது உடலுக்கு இதமாக இருக்கலாம். ஆனால் அப்படி செய்வதால் உங்கள் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை நீக்கி வறட்சியாக்கும். ஆகவே வெதுவெதுப்பான நீரில் குளித்தால் மட்டுமே உங்கள் சருமத்தில் இயற்கையான எண்ணெய் பதத்தை தக்க வைக்கும்.

உடலில் சுரக்கும் எண்ணேய் நம் சருமத்தைப் பாதுகாக்கக் கூடியது. அதிக நேரம் குளிப்பதால், அந்த எண்ணெய்ச் சுரப்புத் தடைப்படும். எனவே, 5 முதல் 10 நிமிடங்கள் மட்டும் குளிப்பதே போதுமானது.

குளியல் அறையில் இருந்து வெளிவரும் போதே நம் உடலில் இருக்கும் நீரை முழுமையாக வடித்து விடுதல் அவசியம். தலையில் விட்டுவிடும் நீர் தலை பாரத்தினை உண்டாக்கும்.

சோப்புக்களில் சேர்க்கப்படும் திரவியங்கள், வேதிப்பொருட்கள் நம் சருமத்தின் நிலைப்பாட்டினை எளிதில் மாற்றக்கூடியவை. இதனால் வாசனைக்காக சோப்புவை பயன்படுத்தாமல் உங்கள் சருமத்திற்கு பொருந்தும் சோப்பை பயன்படுத்துவது சிறந்தது.

குளித்து முடித்ததும் பாடி லோஷனைத் தடவ வேண்டும். இது நாள் முழுவதும் உடலின் ஈரப்பதத்தைத் தக்கவைத்திருக்கும். இயற்கையான தேங்காய் எண்ணெய் அல்லது அவகேடோ எண்ணெயை நான்கு முதல் ஐந்து சொட்டுக்களை எடுத்து பயன்படுத்தலாம்.