பிளாஸ்டிக் பாட்டில்களில் வாங்கும் தண்ணீரில் இவ்வளவு ஆபத்து இருக்கா?

பிளாஸ்டிக் பாட்டில்களில் வாங்கும் தண்ணீரில் இவ்வளவு ஆபத்து இருக்கா?

இன்றைய காலத்தில் பல மக்கள் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரை குடிப்பதை அருந்துவதை பாதுகாப்பாக உணர்கின்றனர். எங்கு சென்றாலும் கையில் ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை வைத்து செல்கின்றார்கள். 

உண்மையில் பிளாஸ்டிக் பாட்டிலில் உள்ள தண்ணீர் நம்மிடம் வந்து சேரும் போது, சூரிய ஒளி மற்றும் சில செயல்கள் மூலம் அதன் தரத்தில் மாறுபடும். பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயன மூலங்களுடன் தண்ணீர் வினைபுரிந்து, வேதியியல் மாறுபாடு நிகழும். இதனால் நீரின் தரத்திலும் மாறுபாடு ஏற்படும் என்று கூறப்படுகின்றது.  

அதுமட்டுமின்றி பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரை தொடர்ந்து பயன்படுத்துவதும் கூட ஆபத்தானது தான். 

வெளியிடத்தில் வாங்கி அருந்தும் தண்ணீரின் தரத்தைப் பற்றி யோசிக்கும் நாம், நம் கையிலோ அல்லது வண்டியிலோ எப்போதும் வைத்திருக்கும் தண்ணீரின் தரத்தைப் பற்றி யோசிப்பதில்லை.

 இது சில உடல் நல பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக கூறப்படுகின்றது. குறிப்பாக கார் அல்லது பைக்கில் வைத்திருக்கும் தண்ணீர் பாட்டில். இது சூரிய ஒளி படுவதன் மூலமும் வேதி வினைகள் நடந்து அது தண்ணீரின் தரத்தை மாற்றும். எனவே எச்சரிக்கையாக இருப்பது மிகவும் முக்கியமானதாகும்.  

அந்த வகையில் தற்போது பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்கப்படும் தண்ணீரை குடிப்பதனால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.    

 என்ன ஆபத்தை ஏற்படுத்தும்?  

* பிளாஸ்டிக் பாட்டில் நீரை நாம் தொடர்ந்து குடித்து வருவது இதய நோய் மற்றும் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும். 

* ஒரே பாட்டிலை திரும்பத் திரும்ப உபயோகிப்பது பாக்டீரியா பெருக்கத்தை அதிகரிக்கிறது. 

* பிபிஏ எனப்படும் ஒரு வேதிப்பொருள் தான், பிளாஸ்டிக் தயாரிக்கப் பயன்படுத்தப்படும். பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் தயாரிப்பிலும் இந்த வேதிப் பொருள் உள்ளது. இது சூரிய ஒளியுடன் வினை புரியும் போது, அந்த வேதிப்பொருள் நாம் அதில் வைத்திருக்கும் தண்ணீரில் கசிய வாய்ப்புள்ளது. அந்த தண்ணீரை நாம் குடிக்கும் போது ஹார்மோன் சீர்குலைவு ஏற்படுதல், இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும் அபாயம் உள்ளது.

* பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலை தொடர்ந்து பயன்படுத்துவது குறித்த ஆய்வில், ஒருவர் தொடர்ந்து 20 வருடங்களாக பிளாஸ்டிக் வாட்டரை பயன்படுத்தி வந்தால் அவர்களுக்கு, புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது என்று தெரிய வந்துள்ளது.