தினை உட்கொள்வது இதய கோளாறுகளை தடுக்கும்-

தினை உட்கொள்வது இதய கோளாறுகளை தடுக்கும்- ஆய்வு சொல்லும் தகவல்!!!

தினை உட்கொள்வது உடலில் உள்ள மொத்த கொலஸ்ட்ராலை 8 சதவீதம் குறைத்து, ஆய்வில் பங்கேற்ற மக்களை உடல் பருமனில் இருந்து சாதாரண நிலைக்குக் குறைப்பதாக ஆய்வு காட்டுகிறது.

தினை உட்கொள்வது மொத்த கொலஸ்ட்ரால், ட்ரையசில்கிளிசரால்ஸ் (triacylglycerols) மற்றும் பிஎம்ஐ ஆகியவற்றைக் குறைக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது சுமார் 900 பேரை உள்ளடக்கிய 19 ஆய்வுகளின் தரவை பகுப்பாய்வு செய்யும் ஒரு புதிய ஆய்வாகும். International Crops Research Institute for the Semi-Arid Tropics (ICRISAT) என்ற சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிறுவனம் தலைமையில் 5 நிறுவனங்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஊட்டச்சத்துக்கான அடிப்படையில் வெளியிடப்பட்ட முடிவுகளில் குழந்தைகள், இளம்பருவத்தினர் மற்றும் பெரியவர்களில் உடல் பருமன் மற்றும் அதிக எடையை குறைக்க போராடுவதற்கு, குறிப்பாக பிரதான உணவாக, தினை உணவுகளை பரிந்துரைக்கலாம் என அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளனர். .

தினை உட்கொள்வது உடலில் உள்ள மொத்த கொலஸ்ட்ராலை 8 சதவீதம் குறைத்து, ஆய்வில் பங்கேற்ற மக்களை உடல் பருமனில் இருந்து சாதாரண நிலைக்குக் குறைப்பதாக ஆய்வு காட்டுகிறது. இரத்தத்தில் குறைந்த மற்றும் மிகக் குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் கொலஸ்ட்ரால் (பொதுவாக இது கெட்ட கொலஸ்ட்ரால் என மருத்துவர்கள் கூறுகின்றனர்) மற்றும் ட்ரையசில்கிளிசரால் அளவுகளில் கிட்டத்தட்ட 10 சதவீதம் குறைவு ஏற்பட்டதாக கண்டறிந்தனர். இந்த குறைப்புகளின் மூலம், உடலின் நிலைகள் இயல்பை விட சாதாரண வரம்பிற்குச் சென்றன. கூடுதலாக, தினை உட்கொள்வது இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது, டயஸ்டாலிக் இரத்த அழுத்தத்துடன் (BP reading-ல் மிகக்குறைந்த அளவு) 5 சதவிகிதம் குறைகிறது.

சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மற்றும் அரைத்த அரிசியை விட 2 முதல் 10 மடங்கு அதிக அளவு மற்றும் முழு தானிய கோதுமையை விட தினையில் சத்துகள் அதிகமாக உள்ளது. தினை வகைகள் பல உள்ளன. ராகி, சாமை, கம்பு, வரகு, குதிரைவாலி, சோளம், சிவப்பு கைக்குத்தரிசி ஆகியவை ஆகும்.

"தினை அடிப்படையிலான உணவை வடிவமைக்க ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்வதை பின்பற்றுவது நல்லது. குறிப்பாக உடல் எடையை பராமரிப்பது மற்றும் atherosclerotic இதய நோய்கள் அதிக அபாயங்களை தரும். கலாச்சார ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய வழிகளில் இதைச் செய்வது சுவையான உணவை உறுதி செய்யும்” என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.