காலை நேரத்தில் வெறும் வயிற்றில் இளநீர் குடிக்காதீங்க!
காலை நேரத்தில் வெறும் வயிற்றில் இளநீர் குடிக்காதீங்க!
இளநீரில் பல ஆரோக்கிய குணங்கள் நிரம்பியுள்ளது. தினமும் இந்த பானத்தை குடித்து வந்தால் உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி அடைய உதவுகிறது. இரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களை சேர்த்து உடலின் செயல் திறனையும் அதிகரிக்கும்.
இளநீரில் நம் உடல் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. இதனை தினமும் குடிப்பதில் தவறில்லை. ஆனால் எந்த நேரத்திற்கு குடிக்க வேண்டும் என்பது முக்கியம்.
சிலர் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதுண்டு. ஆனால் அவ்வாறு குடிப்பதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். சரி வாங்க வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து பார்க்கலாம்..
இளநீரில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்தால், செரிமானம் மேம்படும். அதிலும் இளநீரை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்றில் சுரக்கும் அமிலத்தால் வயிற்று புண் வருவதற்கும் வாய்ப்புண்டு.
இளநீர் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பானம். இதனை ஒருவர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படும். இதனால் உடல் எடை குறையும். முக்கியமாக இளநீரில் சிறிது கொழுப்புக்களும் உள்ளதால் அளவுக்கு அதிகமாக பருகுவதையும் தவிர்க்க வேண்டும்.
இளநீரை ஒருவர் தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இரத்தத்தின் அடர்த்தி 50 சதவீதம் குறையும். இதனால் இரத்த சோகை ஏற்படலாம்.
தினமும் வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதால் சிறுநீரகங்களின் ஆரோக்கியமும், சுத்தமும் கெடுகின்றது. முக்கியமாக இளநீரை ஒருவர் தினமும் குடித்து வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும்.