இளநரை நீங்க நீலிபிருங்காதி எண்ணெய்:

இளநரை நீங்க நீலிபிருங்காதி எண்ணெய் :

தேவையான பொருட்கள் :

நீலி (அவுரி) – 100 கிராம்

வெள்ளைக் கரிசாலை – 100 கிராம்

மருதாணி இலை – 100 கிராம்

நெல்லிக்காய்ச் சாறு – 100 கிராம்

அதிமதுரம் – 50 கிராம்

வெட்டி வேர் – 50 கிராம்

விலாமிச்சம் வேர் – 50 கிராம்

தேங்காய் எண்ணெய் – 500 மி.லி

தேங்காய் எண்ணெயில் மேலே சொன்ன அனைத்து பொருட்களையும் கலந்து அடுப்பேற்றி நன்கு காய்ச்சி வடிக்கட்டி வைத்துக் கொள்ளவும். 

தினமும் தலைமுடிக்குத் தேய்த்துவர இளநரை, பொடுகு, தலை அரிப்பு, தலைமுடி உதிரல், முடி வளர்ச்சி குன்றல், கண்ணெரிச்சல் ஆகியவை நீங்கும். தொடர்ந்து உபயோகிக்க கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். கண் பார்வையை பாதுகாக்கும்.