ஃபுட் பாய்சன் பிரச்சினையை குணப்படுத்த எளிதான வழிகள் !!

ஃபுட் பாய்சன் பிரச்சினையை குணப்படுத்த எளிதான வழிகள் !!

நாம் பல வழிகளில் ஃபுட் பாய்சன் பிரச்சினையை குணப்படுத்த முடியும், இதற்கு சிறந்த மற்றும் எளிதான வழி இயற்கை மூலிகைகள் மூலம் செய்யலாம்.

ஃபுட் பாய்சன் அறிகுறிகள் ஏற்பட்டால் அதனை சரி செய்ய இஞ்சி சிறந்தது. இஞ்சியில் அதிகமான அழற்சி எதிர்ப்பு குணங்கள் உள்ளது. ஒரு கப் தண்ணீரை ஒரு ஸ்பூன் துருவிய இஞ்சியுடன் கொதிக்க வைக்கவும். தேவையான அளவு தேன் அல்லது சர்க்கரை கலந்து குடிக்கலாம். 

தயிரின் ஆன்டிபாக்டீரியல் குணங்கள் ஃபுட் பாய்சன் ஏற்படுத்தும் கிருமிகளுக்கு எதிரான வேலை செய்கிறது. வெந்தய விதைகளில் நிறைய கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது, இது தண்ணீரை உறிஞ்சி, ஃபுட் பாய்சன் ஆகாமல் இருக்க நச்சுக்களை வெளியேற்றுகிறது. 

தேன் அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காரணமாக ஃபுட் பாய்சன் சிகிச்சைகளில் நல்ல பலன் தரும். ஒரு நாளைக்கு மூன்று முறை, ஒரு தேக்கரண்டி தேனை உட்கொள்ளுங்கள். நீங்கள் விரும்பினால் தேநீர் அல்லது எலுமிச்சம்பழத்துடன் குடிக்கலாம்.

சீரகம் சாப்பிடுவது பெரும்பாலும் ஃபுட் பாய்சனுக்கு பாரம்பரிய வீட்டு வைத்தியம் என்று அழைக்கப்படுகிறது. இது உங்கள் உடலில் செரிமான நொதிகளின் செயல்பாட்டை அதிகரிக்கிறது, இதனால் செரிமானத்தை துரிதப்படுத்துகிறது.

ஒரு கப் தண்ணீரில் சீரகத்தை வேகவைத்து, பின்னர் புதிதாக எடுக்கப்பட்ட கொத்தமல்லி சாற்றைச் சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கவும். உப்பு, சீரகம் மற்றும் பெருங்காயம் ஆகியவற்றின் கலவையையும் பயன்படுத்தலாம். இந்த பானத்தை ஒரு நாளைக்கு குறைந்தது 2-3 முறை உட்கொள்ள வேண்டும்.