இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள உதவும் பாலக்கீரை ஸ்மூத்தி!

இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள உதவும் பாலக்கீரை ஸ்மூத்தி! 

நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள உதவும் பாலக்கீரை உதவுகிறது. பாலக்கீரையில் வைட்டமின் ஏ அதிக அளவு நிறைந்து காணப்படுகிறது.

இதில் மெக்னீசியம், ஜிங்க், காப்பர் மற்றும் விட்டமின் கே அதிகம் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக இருப்பதற்கு உதவுகிறது. பல நன்மைகள் நிறைந்த பாலக்கீரையுடன் வாழைப்பழம் கலந்து ஸ்மூத்தி எப்படி செய்வது என்று இந்த தொகுப்பில் பார்கலாம்.

தேவையான பொருட்கள்:

பாலக்கீரை – கைப்பிடியளவு
வாழைப்பழம் – 1
பாதாம் பால் – அரை கப்
தேன் – தேவையான அளவு

செய்முறை:

முதலாவது பாலக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். அதன்பிறகு வாழைப்பழத்தை தோல் உரித்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அதன்பிறகு கீரை மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றை சிறிதளவு பாதாம் பால் கலந்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.

அரைத்த பிறகு அதனுடன் மீதம் இருக்கும் பாதாம் பால் மற்றும் தேவையான அளவு தேன் சேர்த்து நன்கு கலக்கி பருகுங்கள்.

இப்படி செய்யும் போது இயற்கை முறையிலே சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்.