தினமும் தேங்காய் தண்ணீர் குடித்தால் இந்த 7 நன்மைகளும் கிடைக்கும் !
தினமும் தேங்காய் தண்ணீர் குடித்தால் இந்த 7 நன்மைகளும் கிடைக்கும் !
தினமும் நாம் சமையலுக்கு பயன்படுத்த கூடிய முக்கியமான பொருளில் ஒன்று தேங்காய். இந்த தேங்காயை உடைக்கும் போது அதனுள் இருக்கும் தண்ணீரை நம்மில் பலரும் கீழே ஊற்றி விடுகிறோம்.
ஆனால், காலையில் வெறும் வயிற்றில் தேங்காய்த் தண்ணீர் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் தெரியுமா? இது இளநீரை போலவே மிகவும் சுவை உடையது. இதில் பல வைட்டமின்கள் மற்றும் எலக்ட்ரோலைட்கள் உட்பட கனிமங்களால் நிறைந்துள்ளது.
இதில் உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்கத் தேவையான இரண்டு எலக்ட்ரோலைட்களான சோடியம் மற்றும் பொட்டாசியதைக் கொண்டுள்ளது. இவ்வளவு நன்மைகள் நிறைந்த இந்த நீரை தொடர்ந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சிறுநீரக நோய்கள் :
அநேக ஆண்களை ஆட்டி படைக்கும் நோயில் ஒன்று தான் சிறுநீரக பிரச்சனை. இந்த பிரச்னையை எளிய முறையில் போக்க தினமும் தேங்காய்த் தண்ணீரைக் குடித்து வந்தால், சிறுநீரக நோய் தொற்றுக்களை கட்டுப்படுத்தலாம். இது உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றுவதோடு சிறுநீரகக் கற்களையும் கரைக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி :
தேங்காய் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அதுமட்டுமல்லாமல் காய்ச்சல், சளி, சிறுநீர் பாதை தொற்றுகள், ஈறு நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள், இருமலை ஏற்படுத்தும் கிருமிகளை அழித்து வெளியேற்றி விட கூடிய சக்தி தேங்காய் நீருக்கு உண்டு. ஆகவே தினமும் தேங்காய் உடைக்கும் போது தவறாமல் அருந்துங்கள்.
வறட்சி :
வறண்ட சருமம் உடையவர்கள் தினமும் தேங்காய்த் தண்ணீர் குடித்து வந்தால் உடலில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு பொலிவான தோற்றத்தை பெறலாம். மேலும் சுறுசுறுப்பாக செயல்படுவதற்க்கு தேவையான ஆற்றலும் கிடைக்கும்.
தைராய்டு :
தைராய்டு பிரச்சனை இருந்தாலே உடலில் சோம்பேறி தனம் அதிகரிக்கும். இதனை போக்க தேங்காய்த் தண்ணீர் குடித்து வந்தால் உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு தைராய்டு சுரப்பி சீராக செயல் பட உதவி செய்யும்.
செரிமான பிரச்சினை :
தேங்காய்த் தண்ணீரில் நார்ச் சத்து வளமாக நிறைந்துள்ளது. இதனால் செரிமான பிரச்சினை உள்ளவர்கள் தேங்காய்த் தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால் செரிமான பிரச்சனை எளிதில் நீங்கி விடும். மேலும் இதை தொடர்ந்து குடித்து வந்தால், வாயுத்தொல்லை விலகும்.
இரத்த அழுத்தம் :
உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்கள் தினமும் காலையில் தேங்காய்த் தண்ணீர் குடித்தால் உடலின் இருக்கும் எலெக்ரோ லைட்டுக்களை சீராக்கி உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
உடல் எடை :
உடல் எடையை குறைக்க முயற்சி செய்கிறவர்கள் தேங்காய்த் தண்ணீரை தினமும் குடித்தால் உடலில் கொழுப்பு சேருவதை தடுக்கலாம். மேலும் இது பசியை குறைத்து உடல் எடை அதிகரிப்பதைத் தடுத்து விடும்.