மூச்சுத்திணறலை ஏற்படுத்தி சுவாச தொந்தரவை தரும் நோய்களுக்கு எளிய மருந்துகளின் மூலம் தீர்வு

மூச்சுத்திணறலை ஏற்படுத்தி சுவாச தொந்தரவை தரும் நோய்களுக்கு எளிய மருந்துகளின் மூலம் தீர்வு

ஆஸ்துமா மற்றும் சளி இருமல் குணமாக

வெள்ளை எருக்கம் பூ 100 கிராம்
வெள்ளை மிளகு 100 கிராம்

  இவைகளை ஒன்றிரண்டாக இடித்து ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு இவை  மூழ்கும் வரை ஆடாதொடை இலையை இடித்து சாறு  பிழிந்து இந்த சாற்றினை இந்த கலவையில் விட்டு

   இதை ஒரு நாள் ஊறவைத்து மறுநாள்  வெயிலில் வைத்து உலர்த்தி பொடி செய்து கொண்டு

அதன்பிறகு

   இந்த மூலிகை பொடியை இட்லி பாத்திரத்தில் வைத்து பாத்திரத்தில் பசும்பால் மற்றும் தண்ணீர் சமமாக கலந்து  இதிலே ஊற்றி இதை பிட்டவியல் செய்து கொண்டு மீண்டும் இதை வெயிலில் வைத்து உலர்த்தி இடித்து  துணியிலே சலித்து வஸ்திரகாயம் செய்து கொண்டு

   இந்த பொடியை ஒரு கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்

   இதில் மூன்று கிராம் எடுத்து வெந்நீருடன் கலந்து காலை மாலை இருவேளையும் தொடர்ந்து பதினைந்து நாட்கள் சாப்பிட்டு வர சளி இருமல் நீங்கும் ஆஸ்துமா நோய் குணமாகும்

2 தொண்டையில் வளரும் 
    சதை வளர்ச்சி குணமடைய

 வில்வ இலை துளசி இலை இரண்டையும் தனித்தனியாக இடித்து சாறுபிழிந்து வகைக்கு நூறு மில்லி சாறு பிழிந்து இதனுடன் நல்லெண்ணெய் இருநூறு மில்லி சேர்த்து இதை அடுப்பிலிட்டு மர விறகால் லேசான தீயில் எரித்து 

    மூலிகையின் சாறு சுண்டி எண்ணெய்யானது தைல பதத்திற்கு வரும் பொழுது இந்த தைலத்தை இறக்கி வைத்துக்கொண்டு தினமும் தலைக்குத் தேய்க்கும் எண்னெய்க்கு பதிலாக இந்த எண்ணெயை தலைக்குத் தேய்த்து வர வேண்டும்

மேலும்

  இதே எண்ணையை ஒரு ஸ்பூன் எடுத்து வாயிலிட்டு தொண்டையில் படும்படி கொப்பளிக்க வர தொண்டையில் வளரும் சதை வளர்ச்சி குணமாகும் சுவாசிக்க ஏற்படும் சிரமம் நீங்கும்  இந்த எண்ணெய்யை அனைவரும் பயன்படுத்தி பயன்பெறலாம்

  இந்த மூலிகை எண்ணெயை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் தலைக்கு தடவி வரும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் மூக்கடைப்பு எனும் பீனிச நோய் மற்றும் தொண்டையில் தசை வளர்ந்து வீக்கம் உண்டாகி சுவாச தொந்தரவை தரும் டான்சில் எனும் பெரிய நோய்களையும் வராமல் தடுக்கும் வைத்திய முறை இது

மூக்கடைப்பு நீங்க மூலிகை தைலம்

    வில்வ இலையை இடித்து சாறு பிழிந்து இதில் இருநூறு மில்லி சாறு எடுத்து  இதை இருநூறு மில்லி நல்லெண்ணெயில் கலந்து லேசான தீயில் எரித்து மூலிகைச்சாறு சுண்ட தைலம் காய்ச்சி கொண்டு 

   இந்த தைலத்தை வாரத்திற்கு இரண்டு நாட்கள் தலைக்கு தடவி வெண்ணீர் வைத்து குளித்து வர சுவாச தொந்தரவை தரும் மூக்கடைப்பு நீங்கும் கலைக்கு அரைப்பாக சீயக்காய் தூள் தேய்த்து குளிக்க வேண்டும்

சுவாசம் சீராக நடைபெற ஒரு எளிய வைத்தியம்

   சுக்கை இடித்து பொடி செய்து இதன் எடைக்கு சமமாக சீனா கற்கண்டை இடித்து தூள் செய்து இதனோடு கலந்து இதில் இரண்டு கிராம் எடுத்து ஒரு இளநீரில் இதை போட்டு கலக்கி காலை வேளையில் மட்டும் தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டு வர சுவாச தொந்தரவுகள் நீங்கும் 

மேலும்

நெஞ்சுவலி விலா எலும்பை பற்றிய குத்தல் வலி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கும் மூச்சு திணறல் போன்ற சுவாச பிரச்சினையால் ஏற்படும்  அனைத்து நோய்களும் குணமாகும்

 இதே பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வர  சுவாசம் சீராக நடைபெறும். சுவாசம் சார்ந்த நோய்கள் வருவதை தடுத்து நிறுத்தும்