மூங்கில் தண்டை சாப்பிடலாமா? நன்மை உண்டா? தெரிஞ்சுக்கலாம் வாங்க!

மூங்கில் தண்டை சாப்பிடலாமா? நன்மை உண்டா? தெரிஞ்சுக்கலாம் வாங்க!

மூங்கில் தாவரத்தில் இருக்கும் மூங்கில் தண்டுகள் உண்ணக்கூடியவை. சமையலில் சுவையை அளிக்கும் இவை அதிக கலோரியோ கொழுப்போ கொண்டவை அல்ல என்பதோடு ருசியானவையும் கூட. மூங்கில் தாவரத்தில் இருந்து பெறக்கூடிய மூங்கில் தண்டுகள் மூங்கில் குருத்து, மூங்குறுத்து என்று அழைக்கப்படுகிறது.

மூங்கில் தாவரத்திலிருந்து பெறக்கூடிய மூங்கில் தண்டுகள் உண்ணக்கூடியவயும் ஆரோக்கியமானது ஆகும்.

இது பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. நார்ச்சத்து மிகுந்தது. பல ஆரோக்கிய நன்மைகளை உடலுக்கு வழங்கக் கூடியவையாக இருக்கின்றது.

அந்த வகையில் தற்போது மூங்கில் தாவரத்தில் பெறக்கூடிய மூங்கிலை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம். 

நன்மைகள் :

* உடல் பருமன் மற்றும் அதிக எடையின் தாக்கம் கொண்டிருக்கும் அனைவருக்கும் இந்த மூங்கில் குருத்து உதவும்.  

* மூங்கில் தண்டு நார்ச்சத்து உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறியை தடுக்கும் ஆற்றலை கொண்டிருக்கலாம். 

* மூங்கில் தண்டு தமனிகளில் இருந்து கொழுப்பை எளிதாக்க உதவுகிறது. உடல் முழுவதும் இரத்தத்தின் இயக்கம் எளிதாக உதவுகிறது.

* மூங்கில் தளிர்களில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கு ஏற்றதாக இருக்கும். 

* மூங்கில் குருத்து வயிற்றுப்போக்குக்கு நல்லது. இது வயிற்று கோளாறுகளை சரி செய்யவும் உதவும். இது குடல் இயக்கங்களை ஆரோக்கியமாக மேன்மைப்படுத்த மலச்சிக்கல் தடுக்க மூங்கில் குறுத்து உங்களுக்கு உதவலாம்.

* மூங்கில் குருத்து தேனுடன் கலந்து கஷாயமாக்கி கொடுக்கலாம். இது நுண்ணுயிர் கொல்லி என்பதால் அலர்ஜி எதிர்ப்பு பண்பு, ஆன்டி பயாடிக் இருப்பதால் இது காய்ச்சலை குணப்படுத்துகிறது. 

* மூங்கில் குருத்து சாறு நுரையீரல் தொடர்பான ஆஸ்துமா, இருமல், பித்தப்பை பிரச்சினைக்கும் நல்லது.

* ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினையை மூங்கில் இலை சாறு சரி செய்யலாம். வயிற்றுப்பிடிப்பு மற்றும் இரத்தப்போக்கு போன்றவற்றுக்கும் இவை எதிராக இருக்கலாம். 

* கர்ப்பிணிகள் ஆரம்ப காலத்தில் இதை தவிர்க்க வேண்டும். இவை கருப்பை சுருக்கத்தை உண்டாக்கலாம்.

* இரத்த அழுத்தம் குறையாமல் இருப்பவர்கள் மூங்கில் குருத்து உணவில் சேர்த்து வந்தால் இது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும். குறைந்த இரத்த அழுத்தம் கொண்டவர்கள் இதை அதிகமாக சேர்க்க கூடாது.

  ​மூங்கில் தண்டு எப்படி சமைப்பது?

மூங்கில் தண்டை சிறு சிறு குச்சிகளாகவும், தண்டுகளாகவும் வெட்டி கொள்ளலாம். இதை உப்பு சேர்த்த நீரில் 30 நிமிடங்கள் சமைக்கலாம். இதை மட்டன் அல்லது சிக்கன் க்ரேவி போல் சமைக்கலாம். காய்கறி குருமா போன்று வைக்கலாம். சிக்கனுடன் சேர்த்து சமைக்கலாம். காய்கறிகளோடு எடுத்துகொள்ளலாம்.

குறிப்பு  :

 நோய்க்கு வைத்தியமாக மூங்கில் குருத்தை சாறாக்கி எடுக்கும் போது மருத்துவர் ஆலோசனையின்றி எடுக்க கூடாது.  

 தைராய்டு உள்ளவர்களை தவிர்க்க வேண்டும். தாய்ப்பால் தரும் இளந்தாய்மார்கள், கர்ப்பிணி பெண்களும் மூங்கில் தண்டுகளை தவிர்ப்பது நல்லது.