உடலின் அசுத்த இரத்தத்தை சுத்தம் செய்ய உதவும் சில மருத்துவ குறிப்புகள் !!
உடலின் அசுத்த இரத்தத்தை சுத்தம் செய்ய உதவும் சில மருத்துவ குறிப்புகள் !!
நாள்தோறும் நம் உடலில் ஓடும் இரத்தத்தில் அசுத்தங்கள், நச்சுகள், கழிவுகள் சேர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.
இதன் விளைவு நோய்கள், சாதாரண சரும பிரச்னை தொடங்கி வெரிகோஸ் வெயின், புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களுக்கும் இரத்த சுத்தமின்மையே ஒரு முக்கிய காரணம். நோய்களுக்கும் இது வழி வகுக்கும்.
முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச்சத்து அதிகமாக இருக்கின்றது. எனவே இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் இரத்தசோகை இருப்பவர்களின் உடம்பில் நல்ல இரத்தம் உற்பத்தியாகும்.
செம்பருத்தி பூவின் இதழ்களை நன்றாகச் சுத்தம் செய்து காய வைத்து பொடி செய்து அதை தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் 1 டம்ளர் வெந்நீரில் 1 ஸ்பூன் பொடியை கலந்து குடித்து வந்தால், நமது உடல் சோர்வை குறைத்து இரத்தத்தை தூய்மை அடைய செய்யும்.
தினமும் நமது உணவில் பீட்ரூட்டை சமைத்து சாப்பிட்டு வந்தால், நமது உடல்பில் புத்தம் புதிய இரத்தம் உற்பத்தியாகும். மேலும் பீட்ரூட்டை நறுக்கிப் பச்சையாக எலுமிச்சைப்பழச் சாறு கலந்து சாப்பிட்டால், இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.
அரை டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து இரவில் குடித்து வருவது நல்லது. பால், ஆர்கானிக் பாலாக இருப்பது நலம். மஞ்சள் தூள் கலந்த உணவுகள் எல்லாமே உடலுக்கு நல்லதையே செய்யும்.