இளநரை, வழுக்கை தவிர்க்கணுமா? செம்பருத்தியை இப்படி பயன்படுத்தி பாருங்க!!!!
இளநரை, வழுக்கை தவிர்க்கணுமா? செம்பருத்தியை இப்படி பயன்படுத்தி பாருங்க!!!!
செம்பருத்தி எல்லோரும் அறிந்த ஒரு பூ. இதனை செம்பரத்தை என்று அழைக்கப்படும் இது இந்தியா, இலங்கை போன்ற இடங்களில் வளரும் ஒரு செடி இனம்.
செம்பருத்தி பூ அதிகளவு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது மற்றும் இதன் இலை, வேர், பூ என அனைத்தும் மருத்துவ தன்மை கொண்டவை.
இது ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி கூந்தலுக்கு பெரிதும் உதவுகின்றது. நுனிபிளவு, நுனி வெடிப்பு, கூந்தல் உதிர்வு, கூந்தல் வலுவிழப்பு, இளநரை என ஒவ்வொன்றுக்கும் செம்பருத்தி பூ பயன்படுகின்றது.
அந்தவகையில் தற்போது இளநரை, வழுக்கை போன்றவற்றிற்கு இதனை எப்படி பயன்படுத்தலாம் என பார்ப்போம்.
தேவையானவை :
செம்பருத்திப்பூ - 5
செம்பருத்தி இலைகள் - 10
வெந்தயம் - 3 டீஸ்பூன் அல்லது வெந்தயப்பொடி
செய்முறை :
செம்பருத்திப்பூ இதழ்கள், இலைகள் இரண்டையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் அரைத்து எடுங்கள்.
இதில் ஊறவைத்து அரைத்த வெந்தயம் அல்லது வெந்தயப்பொடி சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் குழைக்க வேண்டும்.
நன்றாக குழைத்தால் நுரைபோல் பொங்கி வரும். தலைக்குளியலுக்கு முன்பு கூந்தலை சிக்கில்லாமல் சீவி எடுத்துகொள்வது அவசியம்.
இந்த கலவையை கூந்தலில் தேய்த்து எடுத்தால் கூந்தல் பளிச்சிடும் தொடர்ந்து இதை மட்டும் பயன்படுத்தி வந்தால் கூந்தல் பொலிவு நிச்சயம்.
செம்பருத்தி கூடுதலாக கூந்தலுக்கு தரும் நன்மைகள் என்ன ?
* கூந்தலின் வளர்ச்சியை உறுதி செய்யும் கெராடின் என்னும் அமினோ அமிலங்கள் செம்பருத்தியில் மிகுந்துள்ளது. இது சிறப்பு வகையான புரத கட்டமைப்பை கொண்டிருப்பதால் கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. இது முடி பிளவு மற்றூம் முடி உதிர்தலை தடுக்கிறது.
* முடி அடர்த்தியை ஊக்குவிக்கவும் முடியை சேதமில்லாமல் வைக்கவும் செய்கிறது.
* கூந்தல் பிரச்சினைக்கு செய்யப்படும் கெராடின் சிகிச்சையை செம்பருத்தி பயன்படுத்துவதன் மூலம் இயற்கையாகவே பெற்றுவிடலாம்.
* செம்பருத்தி ஷாம்பு பயன்படுத்துவதால் கூந்தலில் இராசயனங்கள் கலந்தவை தவிர்க்கப்படுகிறது.இது வழவழப்பான தன்மை கொண்டிருப்பதால் கூந்தலுக்கு இயற்கை கண்டிஷனராகவும் செயல்படுகிறது.
* கூந்தல் அடர்த்தி வளர்வதால் வழுக்கை விழாமல் தடுக்கப்படுகிறது.
* எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தி பொடுகு பிரச்சினை வராமல் தடுக்கிறது.