வாயு விடங்கம்

வாயு விடங்கம் 

குடல் பகுதிகளில் பல வகை  பாக்டீரியாக்கள் வளருகின்றன 
அவற்றில் பல நன்மை தருபவையாகவும்  இருக்கின்றன 

ஆனால் நாக்குப் பூச்சி கொக்கிப் புழு நாடாப் புழு போன்றவை குடலில் இருந்து கொண்டு தீங்கு விளைவிக்கின்றன 

வாயு விடங்கம் உடலுக்கு நல்லது செய்யும் கிருமிகளை அழிக்காமல் உடலுக்கு தீங்கு செய்யும் கிருமிகளை மட்டுமே வெளியேற்றும்
 
மருந்தாக 
அரை தேக்கரண்டி வாயு விடங்க சூரணம் சிறிதளவு தேனில் குழைத்து குழந்தைகளுக்கு மாதம் ஒரு நாள் மட்டும் கொடுக்கலாம் அல்லது வெந்நீரில் சாப்பிட கொடுக்கலாம் 
பெரியவர்கள் மாதம் ஒருமுறை மூன்று நாட்கள் தொடர்ந்து ஒரு தேக்கரண்டி சூரணத்தை வெந்நீரில் காலை ஒருவேளை இரவு ஒருவேளை சாப்பிட்டு வர தீங்கு தரும் அனைத்துவகை குடல் புழுக்களும் வெளியேறும் 

உடலில் இருக்கும் தேவையற்ற பூச்சிகளை வெளியேற்ற உதவும் ஒரு அழகான இயற்கை மருந்து இது 

ஆறு மாதங்கள் தொடர்ந்து மாதம் ஒருநாள் மட்டும் வாயு விடங்க சூரணம் குழந்தைகளுக்கு தேனில் குழைத்து கொடுத்து வர செரிமானம் அதிகமாகும் பசி இன்மை கோளாறுகள் நீங்கும்  பசி உண்டாகும், கோபப்படுதல்  நீங்கும் படிப்பில் ஆர்வம் ஏற்படும் நினைவு சக்தி மேம்படும் 

தோல் நோய் ஏற்படுவதற்கும் பார்க்கின்சன் நோய் வெண் புள்ளிகள் நோய் ஏற்படுவதற்கும் வயிற்றில் உள்ள புழுக்கள் ஒரு காரணமாக அமைந்து விடுகின்றன 

தோல் நோய்களுக்கு  வாயு விடங்கத்தை பதப் படுத்தி எடுக்கக் கூடிய வாயு விடங்க தைலம் மிக சிறந்த மருந்து 

படர்தாமரை 
உள்ளங்கை உள்ளங்கால் வெடிப்பு சொரியாசிஸ் நோய் 
 கழுத்துப் பகுதியில் கருமையான நிற மாற்றம் 
அக்குள் பகுதிகளில் கருமையான நிற மாற்றம் 
கால் மடிப்புகளில் பாதங்களில் கருமையான நிற மாற்றம் பிரச்சினைகளுக்கு 
வாயு விடங்க எண்ணையை தேய்த்து ஒருமணி நேரம் கழித்து குளித்து வர குணமாகும் 
 

மூல நோய்யைக் குணப்படுத்தும் அற்புதமான மருந்து வாயு விடங்கம் ஆகும்  
மூல நோயைக் குணப்படுத்த 
ஒரு தேக்கரண்டி வாயு விடங்கத்தை இருநூறு மில்லி பாலில் போட்டு காய்ச்சி இறக்கி ஆறவைத்து ஒரு தேக்கரண்டி தயிர் ஊற்றி தயிராக மாற்றி மறுநாள் காலையில் தண்ணீர் சேர்த்து தயிரை கடைந்து வெண்ணெயை தனியாக எடுத்து விட்டு கிடைக்கும் மோரை மட்டும் குடிக்கவும் 

வெண்ணையை சேர்த்து வைத்து நெய்யாக உருக்கி அதை உணவில் சேர்த்து சாப்பிட்டு வரவும் 
மூன்று மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர மூல நோய் படிப்படியாக குணமாகி வரும் 

விட்டிலிகோ என்ற வெண் புள்ளி நோயை தீர்க்க 

ஒரு தேக்கரண்டி வாயு விடங்கத்தை இருநூறு மில்லி பாலில் போட்டு காய்ச்சி இறக்கி ஆறவைத்து ஒரு தேக்கரண்டி தயிர் ஊற்றி தயிராக மாற்றி மறுநாள் காலையில் தயிரை கடைந்து வெண்ணெயை தனியாக எடுத்து விட்டு கிடைக்கும் வெண்ணையை சேமிக்கவும் 

சேர்த்து வைத்த வெண்ணையை நெய்யாக உருக்கி தினமும் காலை இரவு என இரண்டு வேளைகள் 
இருபது மில்லி வாயு விடங்க நெய்யை  உணவில் சேர்த்து சாப்பிட்டு வர  வேண்டும்.

ஆறுமாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர எந்த மருந்துக்கும் கட்டுப்படாத வெண்புள்ளி நோய்கள் குணமாகும் 

பதினைந்து வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெரும் பிரச்சினை பேன் தொல்லை ஆகும் 

வாயு விடங்கம் எண்ணெயை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளித்து வர பேன்  தொல்லை அகலும் 
தொடர்ந்து மூன்று மாதங்கள் வாரம் ஒரு முறை இவ்வாறு செய்து வர வேண்டும் 
பேன் பொடுகு தொல்லைகள் குறைவது மட்டுமல்ல தலை முடியும் கருகருவென ஆரோக்கியமாக வளரும் 

ஆண்களுக்கு ஏற்படும் புழு வெட்டு பிரச்சினைகளுக்கும் வாயுவிடங்க எண்ணெய் பயன் தரும் 

வாயு விடங்கத்தை உள் மருந்தாகவும் வெளிப்புற மருந்தாகவும் பயன் படுத்தி நலமுடன் வாழ முடியும்