நச்சுக்களை முறிக்கும் மஞ்சள் + மிளகு நீர்

நச்சுக்களை முறிக்கும் மஞ்சள் + மிளகு நீர்

நம் உடலில் பல்வேறு வழிகளில் நச்சுக்கள் வந்து சேருகின்றன. அந்த நச்சுக்களை Toxins என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். உணவுகளில் கலக்கப்பட்டுள்ள ரசாயனங்கள், சுவையூட்டிகள், கலப்படங்கள், நிறமூட்டிகள், கிருமிநாசினிகள் போன்ற இன்னோரன்ன விஷங்கள் தினம் தினம் நம் உடலில் வந்து சேர்கின்றன. அதனை சுத்திகரிக்க கல்லீரலானது மிகவும் கஷ்டப்படுகின்றது.

இப்படி உடலில் சேரும் நச்சுக்களை முறியடிக்கும் ஒரு சிறந்த பொக்கிஷமாக திகழ்கிறது மஞ்சள் மற்றும் மிளகு. 

தினமும் காலையில் வெறும் வயிற்றிலும் மற்றும் இரவு உறங்க முன்னரும் ஒரு கிளாஸ் சூடான நீரில் அரை தேக்கரண்டி மஞ்சள், கால் தேக்கரண்டி மிளகு சேர்த்து குடித்து வர வேண்டும்.

மஞ்சளில் உள்ள curcumin மற்றும் மிளகில் உள்ள piperine இரண்டும் ஒரு சேர இணையும் பொழுது நச்சுக்கள் வெளியேறுவது மட்டுமன்றி பல நல்ல மாற்றங்கள் உண்டாகும்.

உடலின் ஜீரண உறுப்புக்களின் இயக்கம் சீராக அமைகிறது. இதனால் குடல் புண், உணவு எதுக்களித்தல், நெஞ்செரிவு போன்ற பல நோய்கள் குணமாகும்.

மஞ்சள், மிளகில் உள்ள சில கனிமங்கள் உடலில் உள்ளும், புறமும் ஏற்படும் வீக்கங்களை குறைக்கவல்லது. இதனால் மூட்டுவலிகள், எலும்பு தேய்மான வேதனைகள், இடுப்பு வலி போன்றன நீங்கும்.

புற்றுநோய்க்களங்களை அழிக்கவல்லது. புற்று நோய் தோன்றாமலும் உடலை பாதுகாக்கும்.

கர்ப்பப்பை கட்டிகள், சீரற்ற மாதவிடாய் போன்ற அனைத்துக்கும் நல்ல நிவாரணி.

சளி, இருமல், சைனஸ், வைரஸ் நோய் தாக்கங்கள், காய்ச்சல் போன்றவற்றை குணமாக்கும்.

தோல் அழகை பராமரிக்கும். இதனால் தோலில் எளிதில் சுருக்கங்கள் விழாது. ஏனெனில் இவற்றில் anti-oxidant கனிமங்கள் உள்ளன

மூளையின் செயல்திறனை அதிகரிக்கும்.

இதயப் பிரச்சினைகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

வயதாகும் பொழுது ஏற்படும் ஞாபக மறதி நோய்களை விரட்டவும், நினைவுத்திறன் அதிகரிக்கவும் மஞ்சள், மிளகு அருந்தி வருதல் மிகுந்த பலனை தரும்

முடக்குவாத நோயை குணமாக்கும்

உடலில் சேரும் கொழுப்பை குறைக்கும்

உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களின் தாக்கத்தையும் குறைக்கும்.

உடலின் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்

உணவுப் பொருட்களின் மூலமும், சுவாசத்தின் மூலமும் உடலில் சேரும் விஷங்களை முறிக்கும்.

தொடர் முயற்சியே வெற்றி தரும். இதனோடு ஆரோக்கியமான உணவுகளும், சீரான தூக்கமும், முறையான உடற்பயிற்சியும் இருந்தால் தீராத வியாதியும் தீரும்.