அலுமினிய தாளில் உணவை பேக் செய்து சாப்பிடுவதால் ஆண்மை குறைபாடு ஏற்படுமா?

அலுமினிய தாளில் உணவை பேக் செய்து சாப்பிடுவதால் ஆண்மை குறைபாடு ஏற்படுமா?

இன்றைய காலத்தில் அலுமினியத்தகடு பொதுவாக மேற்கிந்திய சமையலில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சூடாக சாப்பிட வேண்டும் என்ற ஆசையில் அலுமினியத் தகடுகள் இன்று அதிக பயன்பாட்டில் உள்ளது.

இருப்பினும் இது உடல்நலத்தை அபாயத்திற்குள்ளாக்கும் எனவும் சிலர் கூறுகின்றனர்.

குறிப்பாக அலுமினிய தாளில் உணவை பேக் செய்து சாப்பிடுவதால், ஆண்மை பாதிப்பு முதல் கிட்னி பாதிப்பு வரை உடலில் பல விதமான பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது என்றும் கூறப்படுகின்றது.     

அந்தவகையில் அலுமினிய தாளில் உணவை பேக் செய்து சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புக்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.  

அலுமினியத் தாளில் பேக் செய்யப்பட்ட உணவை சாப்பிடுவதால் ஆண்களுக்கு ஆண்மைத் தன்மை குறைகிறது. இதன் காரணமாக, அவருக்கு மலட்டுத் தன்மை ஏற்பட்டு குழந்தை பிறப்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றது.

அலுமினியம் தாளில் பேக் செய்யப்பட்ட சூடான உணவை சாப்பிடுவதன் மூலம், அல்சைமர் மற்றும் டிமென்ஷியா போன்ற ஞாபக சக்தி குறைவதினால் ஏற்படும் தீவிர நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

அலுமினியத் தாளில் பேக் செய்யப்பட்ட உணவை தினமும் சாப்பிட்டால், அது உடலில் பலவீனத்தை ஏற்படுத்தும். இதனுடன், சிறுநீரக நோய் அபாயமும் அதிகரிக்கிறது. 

அலுமினியத் தாளில் பேக் செய்யப்பட்ட உணவை தினமும் சாப்பிடுவதன் மூலம், உங்களுக்கு மூச்சுப் பிரச்சினை அல்லது ஆஸ்துமாவும் ஏற்படலாம். 

அலுமினியத் தாளில் பேக் செய்யப்பட்ட உணவை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படுகிறது. இது நோய்களை எதிர்த்துப் போராடும் உடலின் திறனை குறைக்கிறது.