நீண்ட கூந்தல் வளர்ச்சிக்கு:-

நீண்ட கூந்தல் வளர்ச்சிக்கு:-

இங்கு நான் உங்களுக்காக சித்தர்களால் அருளப்பட்ட ஒரு மிகச் சிறந்த கூந்தல் தைலத்தைப் பற்றிய குறிப்பை சொல்கிறேன். கவனமாய் குறிப்பெடுத்து, கருமையான கூந்தலுக்கு அச்சாரம் போடுங்கள்.

தேவதாருக்கட்டை – 50 கிராம்
கோஷ்டம் – 50 கிராம்
ஏலக்காய் – 50 கிராம்
வெள்ளைக் குண்டுமணிப்பருப்பு – 50 கிராம்
ஏலரிசி – 50 கிராம்
பொன்னாங்கண்ணிச் சாறு – அரை லிட்டர்
நல்லெண்ணெய் – 2 லிட்டர்

     முதலில், வெள்ளைக் குண்டுமணியை பசும்பாலில் 12 மணி நேரம் ஊறவைத்து அதன் தோலை அகற்றிவிடவும். பின்னர் ஏலக்காயை உடைத்து உள்ளிருக்கும் விதையை மட்டும் 50 கிராம் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும். தேவதாரு, கோஷ்டம் இரண்டையும் நன்றாகத் எடுத்துக்கொள்ளவும். தேவதாரு, கோஷ்டம் இரண்டையும் நன்றாகத் தூள் செய்து, அத்துடன் வெள்ளைக் குண்டுமணிப் பருப்பு ஏலரிசி ஆகியவற்றைச் சேர்த்து, சிறிது பொன்னாங்கண்ணிச் சாறு விட்டரைத்து விழுதாக்கவும். அரைத்த விழுதை மீதமுள்ள பொன்னாங்கண்ணிச் சாற்றுடன் கலந்து மறுபடியும் 12 மணி நேரம் ஊற வைக்கவும்.

     இனி, இரண்டு லிட்டர் நல்லெண்ணெயை அடுப்பிலேற்றி, ஏற்கெனவே தயாரித்து வைக்கப்பட்டுள்ள பொன்னாங்கண்ணி விழுதையும் சேர்த்து, பதமுறக் காய்ச்சவும். தைலம், கடுகு பதத்தில் திரளும்போது இறக்கவும். சூடு ஆறியபின் தைலத்தை வடிகட்டி பத்திரப்படுத்தவும்.

     இந்த தைலத்தைப் பயன்படுத்தினால் தலைமுடி நன்றாக வளரும். குறிப்பாகப் பெண்களுக்கு அவர்களே அதிசயிக்கத்தக்க அளவில் கூந்தல் மிக நீளமாகவும் கறுமையாகவும் வளரும். வழுக்கைத் தலையில்கூட முடி முளைக்கும். மேலும் உஷ்ண நோய்கள், கண்ணெரிச்சல், பித்த மயக்கம், போன்றவைகூட இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.