வில்வ இலை தைலம்:

வில்வ இலை தைலம்:

தலை சம்பந்தப்பட்ட நோய்கள்.தீரும்:-

தலைநோய்
கழுத்து இசிவு
பிடரிவலி இவைகள் குணமாகும்.

தேவையான சரக்குகள்:

1.வில்வ இலையை அரைத்த விழுது
(ஆரஞ்சுப்பழ அளவு)

2.எள்ளெண்ணை
(நல்லெண்ணெய்)...
(1/2 லிட்டர்)

செய்முறை:-
வில்வ இவைகளை சுத்தமானதாகத்
தேர்ந்தெடுத்து தண்ணீரில் சுத்தி செய்து,நைய நன்றாக அரைத்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணையை விட்டு அதில் வில்வ இலை விழுதைப் போட்டு எண்ணையுடன் நன்றாக உறவாகும்படி கலந்து கொள்ளவும்.
பாத்திரத்தை அடுப்பேற்றி மிதமான
தீயாக எரித்து நீர் சுண்டிய பிறகு பக்குவமான பதத்தில் இறக்கி வடிகட்டிக் கொண்டு முட்டியில் அடைக்கவும்.

உபயோகம்:-

விடியற்காலையில் சுமார் 5-6 மணிக்கு இந்த எண்ணையில் தேவையான அளவு எடுத்து, தலைக்கு தேய்த்துக் கொண்டு 1/2அல்லது1-மணி நேரம் ஊறிய  பிறகு, வெந்நீரில் குளிக்கவும். தலையை துவட்டியவுடன் ரசத்துடன் சாதம் சாப்பிடவும். இவ்வாறு வாரத்தில் 1-2 ஸ்நானம் செய்து கொண்டு வர மேற்குறிப்பிட்ட நோய்கள் தீரும்.குணம் காணும் வரை 5-6 ஸ்நானங்களாவது
செய்யவும்.

குறிப்பு:-

ஸ்நானம் செய்து அன்று பகல்
நித்திரை கூடாது.