மண்பானை சமையல்

மண்பானையில் சாதம் வடித்து சாப்பிடுவதால் உடலில் என்ன மாதிரியான நன்மைகள் உண்டாகும் தெரியுமா?

 மண்பானை பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. அவை உணவிற்கு தனிச்சுவை அளிக்கின்றன. மண்பானையில் அரிசியை சமைப்பதால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன.

மண்பானையில் உணவை சமைக்கும்போது அது மென்மையாகவும் பஞ்சு போன்றும் இருப்பதை காணலாம். இது சுவையை மட்டுமின்றி உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் வாரி வழங்குகின்றது. 

அந்த வகையில் தற்போது மண்பானையில் சமைப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம். 

மண்பானையில் சமைக்கபடும் உணவானது சீரான ஆரோக்கியமான உணவாக உள்ளது. எனவே மண்பானையில் நன்கு சமைக்கப்பட்ட உணவை உண்பது மூலம் நம் உடலில் இன்சுலின் சமநிலையில் இருக்கும். இதனால் மண்பானையில் சமைக்கப்படும் உணவானது நீரிழிவு நோயாளிகளுக்குக் நன்மை பயக்கிறது.

நீங்கள் நிரந்தரமாக மண்பானைகளை பயன்படுத்த துவங்கும்போது நீங்கள் உங்களை ஆரோக்கியமாக உணரலாம். மேலும் இதில் உலோக நச்சுக்கள் இல்லாததால் இதில் உள்ள அதிக ஆற்றல் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

மண்பானைகள் இயற்கையாகவே காரத்தன்மை கொண்டவை என்பதால் அவை அமிலத்தன்மையை கையாள்கின்றன. இதனால் இது பி.ஹெச் நிலையை சமநிலைப்படுத்த உதவுகிறது. இதனால் பானையில் செய்யப்படும் சாப்பாடானது பி.ஹெச் அளவை நிர்வகிக்கின்றன.   

மண்பானையில் சமைக்கும் உணவுகளில் குறைவான அளவில் எண்ணெய் சேர்த்தாலே போதுமானது. மண்பானைகள் நீங்கள் சிறிய அளவில் எண்ணெய் சேர்த்தாலும் அதை கொண்டு பானையை முழுவதும் ஈரப்பதமாக்குகின்றன. அதனால் மண்பானைகளில் சமைப்பதன் மூலம் உணவுகளில் எண்ணெய் அளவை குறைக்க முடியும். இது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. 

உலோக பாத்திரங்களை விடவும் மண்பானைகள் அதிக சுவையை உணவிற்கு அளிக்கின்றன. அது அதிகமான நறுமணம் மற்றும் சுவையை அளிக்கிறது. நம் முன்னோர்கள் மண்பானையை ஏன் பயன்படுத்தினார்கள் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.