இரவு தூங்கும்முன் பாலில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து குடித்தால் உடலில் நல்ல மாற்றங்கள் எல்லாம் நடக்கும்

இரவு தூங்கும்முன் பாலில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து குடித்தால் உடலில் நல்ல மாற்றங்கள் எல்லாம் நடக்கும்

பாலும் நெய்யும் நமது இந்திய உணவுப் பழக்கங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

இவை இரண்டும் பல வகைகளில் நமது உடல் நலத்திற்கு நன்மைகள் புரிகின்றன. அதனை இரவில் குடிப்பதனால் உடலுக்கு நல்ல அற்புதபயனை வழங்குகின்றது.

அந்தவகையில் பாலுடன் நெய் கலந்து குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம். 

* பாலும் நெய்யும் சேர்ந்த கலவையை இரவு நேரங்களில் அருந்தும் போது இவை இரண்டும் உடலின் செரிமானத்திற்கும், அதிகளவு உட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்வதற்கும் பெரிதளவு உதவி புரிகின்றது. எனவே, இவை இரண்டும் நிம்மதியான தூக்கத்திற்கு வழி வகுக்கின்றன. 

* தினமும் ஒரு கிளாஸ் பாலுடன், ஒரு ஸ்பூன் நெய் கலந்து அருந்தி வருவது உடலின் செரிமான அமைப்பை மிகவும் பலப்படுத்தும்.

* நெய் கலந்த பாலை நாம் தினமும் அருந்தும் போது அவை இரண்டும் நமது உடலின் வளர்சிதை மாற்ற அமைப்பின் செயல்பாட்டை ஊக்குவிக்கின்றன.

* தினமும் இரவில் நெய் கலந்த பாலினை அருந்துவதன் மூலம் அந்த வலிகளிலிருந்து விடுபடலாம். நெய்யானது செயல்பட்டு மூட்டு வலியினை குறைக்க உதவுகின்றது.  

* தினமும் இரவில் நெய் கலந்த பாலினை அருந்துவதன் மூலம் அந்த பிரச்சினையிலிருந்து விடுபடலாம். இந்த இரண்டு பொருட்களும் நம்மை வெகுவிரைவாக தூங்கவைக்கும்.

* உடல் மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்கள், இந்த நெய் கலந்த பாலினை அருந்துவதன் மூலம் விரைவில் உடல் எடையினைக் கூட்டி நலமுடன் வாழலாம்.  

* பாலூட்டும் தாய்மார்கள் இந்த நெய் கலந்த பாலினை தினமும் அருந்தி வர நல்ல பயனைக் கொடுக்கும்