குறட்டை வருவதற்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும்...!!!
குறட்டை வருவதற்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும்...!!!
தூங்கும் போது நாசி மற்றும் தொண்டை வழியாக மாறி மாறி சுவாசிப்பதால் குறட்டை ஏற்படுகின்றது. சுவாசத்தில் ஏற்படும் இந்த இடையூறு காரணமாக தொண்டையில் உள்ள திசுக்கள் அதிர்ந்து குறட்டை ஒலி எழுப்புகின்றது.
குறட்டையால் அருகில் உறங்குவோருக்கு தூக்கம் கெடும். குறட்டை ஏற்பட உடற்பருமன், வாய்/நாசி/தொண்டை கோளாறு, தூக்கமின்மை ஆகியவை காரணமாகவும் அமையும். தூங்கும் முன் மது அருந்தினால் கூட குறட்டை ஏற்படும்.
சத்தமான குறட்டை, அடிக்கடி குறட்டை, தூங்கும் போது மூச்சுத்திணறல், காலை எழுந்தவுடன் தலைவலி, வறண்ட தொண்டையுடன் விழித்தல், ஞாபக மறதி, பகல் நேரத்தில் தூக்கக் கலக்கம் ஆகியவை இருந்தால் மருத்துவரை உடனே அணுக வேண்டும்.
குறட்டை தொல்லையில் இருந்து விடுபடுவதற்கான வழிகளை பார்ப்போம்
உடல் பருமன்
உடற்பருமன் உள்ளவர்கள் குறட்டை விட அதிக வாய்ப்பு உள்ளது. தொண்டை பகுதியில் கொழுப்புத் திசு மற்றும் நலிவான தசை இருந்தால் குறட்டை வரும். எனவே உடல் எடை குறைப்பது மிகவும் அவசியம்.
மது குடிப்பது
தொண்டை தசைகளை லேசாக்கி குறட்டை ஏற்பட காரணமாக அமைவதால் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
பக்கவாட்டில் உறக்கம்
நேராக படுத்தால் குறட்டை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, பக்கவாட்டில் படுக்க வேண்டும்.
பழங்கள்
உணவில் மெலடோனின் அதிகம் எடுத்துக் கொண்டால் ஆழ்ந்த உறக்கம் பெறலாம். எனவே, மெலடோனின் அதிகம் உள்ள வாழைப்பழம், அன்னாசிப் பழம், கமலாப்பழம் ஆகியவை சாப்பிடலாம்.
உயரமான தலையணை
தலையணைகள் கொண்டு தலையை உயர்த்தி வைத்து தூங்கினால் சீராக சுவாசிக்கலாம்.
புகை பிடித்தல்
சுவாசப்பாதையில் எரிச்சல் உண்டாக்குவதால் புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும். புகை பிடிப்பதால் குறட்டை தொல்லை அதிகமாகும்.
எச்சில் சுரக்க செய்வதால் இஞ்சி தொண்டைக்கு இதமளிக்கும். தினமும் 2 முறை தேன், இஞ்சி தேநீர் அருந்தினால் குறட்டை தொல்லை நீங்கும்.
தூக்க மாத்திரைகள்
அதிகமாக தூங்கினால் குறட்டை வரும். எனவே, தூக்க மாத்திரைகளை தவிர்க்க வேண்டும்.
பால்
பால் மற்றும் பால் பொருட்கள் தொண்டை மற்றும் நாசியில் வீக்கம் ஏற்படுத்தும். பால் குடிப்பதை முற்றிலுமாக தவிர்க்க தேவையில்லை. இருப்பினும், தூங்கும் முன் பால் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
நீர் பற்றாக்குறை
உடலில் நீர் பற்றாக்குறையால் சளி ஏற்படும். இதனால் கூட குறட்டை வரலாம். ஆண்கள் நாளொன்றுக்கு 3.7 லிட்டர், பெண்கள் 2.7 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.