தொப்பை கொழுப்பை மிக வேகமாக குறைக்கும் சூப்பர் தேநீர்

தொப்பை கொழுப்பை மிக வேகமாக குறைக்கும் சூப்பர் தேநீர் !

அதிக அளவில் வெளியே தெரியும் தொப்பை பலருக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சினை. தொப்பை அழகை குறைப்பது மட்டுமல்லாமல் உடல்நலத்திலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. நாம் சாப்பிடக்கூடிய உணவு கொழுப்பாக சேமிக்கப்படுவது தொப்பையாக வெளியே தெரிகிறது. பல பெண்களுக்கும் இந்த தொப்பை ஒரு பெரிய பிரச்சினையாக மாறிவிடுகிறது.

அது அவர்களுடைய அழகை மிகவும் குறைப்பதாக கருதுகிறார்கள். இதற்கு பல வழிமுறைகளை மேற்கொள்கிறார்கள். ஆனால் மிக எளிய முறையில் செலவே இல்லாமல் உங்களுடைய வீட்டில் இருக்கக்கூடிய ஒரே ஒரு பொருளைக் கொண்டு நீங்கள் எளிதாக உங்களுடைய தொப்பை கொழுப்பை கரைக்க முடியும். எப்படி இதை செய்வது பார்ப்போம்.

பொதுவாக நம்முடைய எல்லா வீடுகளிலும் இஞ்சி இருக்கும். இந்த இஞ்சியானது தொப்பை கொழுப்பை குறைப்பதற்கு அற்புதமான ஒரு பொருளாகும். தொப்பை கொழுப்பை மட்டுமில்லாமல் உடலில் இருக்கக்கூடிய கொழுப்புகளை குறைத்து உடல் எடையும் குறைக்கக் கூடிய சக்தி இந்த இஞ்சிக்கு உள்ளது. இஞ்சியானது உணவை வேகமாக ஜீரணிக்க உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் உடலிலிருந்து ஜீரணிக்கப்படாத கெட்ட கொழுப்புகளையும் வெளியில் அகற்றவும் உதவுகிறது.

இதனால் அதிக அளவில் வயிற்றுப் பகுதியில் சேமிக்கப்படக் கூடிய கொழுப்பு தொப்பையாக மாறுவது இஞ்சி உட்கொள்வதன் மூலம் குறைகிறது. அதுமட்டுமில்லாமல் உடலில் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரித்து 20 சதவிகிதம் வரை உடலில் சேமிக்கப்படக்கூடிய தொப்பையில் சேமிக்கக்கூடிய கொழுப்பை எரிக்க உதவுகிறது.

அதுவும் இந்த இஞ்சியை நீங்கள் தேநீராக பருகும் பொழுது அது இன்னும் அதிக அளவில் உடல் எடையையும் தொப்பையில் இருக்கக்கூடிய கொழுப்பையும் குறைக்க உதவுகிறது. ஃப்ரெஷ்ஷாக இருக்கக் கூடிய இஞ்சி ஒரு சிறிய துண்டு எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த இஞ்சியை நன்றாக தோல் சீவி சிறிதாக நறுக்கி இரண்டு கப் தண்ணீரை கொதிக்க வைத்து தண்ணீர் கொதித்த பிறகு அதில் இந்த இஞ்சி துண்டுகளை சேர்த்து ஒரு 15 நிமிடங்கள் நன்றாக கொதிக்கவிடுங்கள். இப்பொழுது இஞ்சி தேநீர் பருக தயாராக இருக்கும். இதை இளஞ்சூடாக நீங்கள் குடிக்கும் பொழுது உங்களுடைய உடல் எடை தொப்பை கொழுப்பை மிக வேகமாக குறைக்க கூடியது. மிகவும் எளிதாக பெரிய செலவில்லாமல் உங்களுடைய வீட்டிலேயே நீங்கள் இதை செய்து பயன்படுத்தலாம். நல்ல பலனைக் கொடுக்கக் கூடியது.