பூசணி விதை ஆண்களின் ஆரோக்கியத்திற்காக இவ்வளவு நன்மைகள் தருகிறதா..?

பூசணி விதை ஆண்களின் ஆரோக்கியத்திற்காக இவ்வளவு நன்மைகள் தருகிறதா..?

பூசணிக்காய் மகிமை நிறைந்தது. அதிலும் பூசணி விதைகளுக்கு எக்கச்சக்க மருத்துவக் குணங்கள் உள்ளன. இது தெரியாமல் பலர், சமைக்கும்போது பூசணிக்காயை நறுக்கியவுடனேயே அதனுள்ளே இருக்கும் மொத்தப் பூசணி விதைகளையும் அப்படியே வழித்தெடுத்து, வெளியே கொட்டிவிடுவார்கள்.

உண்மையில் இவற்றின் மருத்துவக் குணங்கள் அபாரமானவையாகும். இது பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது. குறிப்பாக ஆண்களின் பல பிரச்சினைகளை சரி செய்ய உதவுகின்றது. 

அந்தவகையில் பூசணி விதைகளை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம். 

* பூசணி விதை உட்கொள்வது புரோஸ்டேட் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது ஆண் பாலியல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. இது பொதுவாக புரோஸ்டேட் சுரப்பியை வலுப்படுத்தவும், ஆண்களில் ஆரோக்கியமான ஹார்மோன் செயல்பாட்டை ஊக்குவிக்கவும் பயன்படுகிறது. 

* பூசணி விதைகளை உட்கொள்வது தீங்கற்ற புரோஸ்டேடிக் ஹைப்பர் பிளேசியா (பிபிஹெச்) க்கு உதவக்கூடும். சிறுநீர் கழிப்பதில் உண்டாகும் பிரச்சினைகளை சரி செய்ய உதவும். 

* பூசணி விதைகளை தவறாமல் உட்கொள்வது BPH தொடர்பான அறிகுறிகளைக் குறைக்க உதவும்.

* பூசணி விதைகள் ஆண்களின் கருவுறுதலை ஊக்குவிப்பதற்கும், புரோஸ்டேட் பிரச்சினைகளைத் தடுப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பது ஆரோக்கியமான டெஸ்டோஸ்டிரோன் அளவையும் மேம்படுத்த உதவும்.

* பூசணி விதைகளில் ஸிங்க் அதிகம் இருப்பதால், அவை செல்களைப் புதுப்பித்தல், சருமச் சேதத்தை சரிசெய்து ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவற்றை செய்கிறது. 

* பூசணி விதைகள் பாஸ்பரஸின் முக்கிய ஆதாரமாக இருக்கின்றன. இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் ஆற்றலுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. 

* பூசணி விதைகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இது இதயத்தின் இயக்கம் , இரத்த நாளங்களின் தளர்வு மற்றும் தடையற்ற குடல் செயல்பாடு போன்ற முக்கியமான உடலியல் செயல்பாடுகளுக்கு உதவுகிறது. 

* பூசணி விதைகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. பூசணி விதைகள் டிரிப்டோபன் பண்புகளை நிறைவாக கொண்டிருப்பதால் அவை தூக்கம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கின்றன.

எப்படி சாப்பிடலாம்?

* பூசணி விதைகளை சாப்பிடத் தொடங்குவதற்கு சுலபமான வழி தினமும் ஸ்நாக்சாகவோ அல்லது சிற்றுண்டி உணவுகளில் சேர்பதம் மூலமாகவோ சாப்பிடலாம்.