மெட்டி ஒலி...

 மெட்டி ஒலி...

 

பெண்கள் மெட்டி அணிவதால் கிடைக்கக்கூடிய செல்வங்கள்..!

 

* திருமணத்தின் போது பலவிதமான சடங்குகளும், சம்பிரதாயங்களும் பின்பற்றப்படுகின்றன. அவை அனைத்தும் பெயருக்கு சடங்குகளாக தோன்றினாலும், அறிவியல் மற்றும் உளவியல் ரீதியாக நமக்கு பல நல்ல விஷயங்களை தருவதாக இருக்கிறது. 

 

திருமண சடங்குகளில் மிகவும் முக்கியமானது மணப்பெண்ணுக்கு மெட்டி அணிவித்தல். 

* பழங்கால வழக்கத்தில், திருமணமான ஆணுக்கு மெட்டியும், பெண்ணுக்கு தாலியும் தான் அடையாள அணிகலன்களாக இருந்தது. இதற்குப் பின்னாலும் ஒரு அறிவார்ந்த காரணம் பொதிந்து இருந்தது. பெண்ணானவள் எப்போதும் நிலத்தைப் பார்த்து நடக்க பழக்கப்பட்டதால், தனக்கு எதிரே வரும் ஆணின் காலைப் பார்த்து அவன் திருமணம் ஆனவனா? இல்லையா? என்பதை தெரிந்துகொள்ள அவன் காலில் அணிந்திருந்த மெட்டி உதவியாக இருந்தது. அதே போல் நெஞ்சை நிமிர்த்தி நடந்து வரும் ஆண், எதிரே வரும் பெண்ணின் கழுத்தில் தென்படும் திருமாங்கல்யத்தை வைத்து அவள் திருமணமானவள் என்பதை தெரிந்து கொள்கிறான். காலப்போக்கில் மெட்டி என்பது பெண்ணின் ஆபரணப் பட்டியலில் சேர்ந்து விட்டது.

 

பெண்கள் மெட்டியை அணிவதன் காரணம்:

* திருமணம் முடிந்ததும் சிறிது காலத்தில் அனைவரும் எதிர்பார்ப்பது மழலை செல்வம். பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும், கால்விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால்விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை.

 

* பெருவிரலில் இருந்து இரண்டாவது விரலான நடுவிரலில் ஓடும் நரம்பானது பெண்களின் கருப்பையுடன் இணைந்து இதயம் வழியாக செல்கிறது என்பதால் திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் ஏற்படும் சிக்கல்கள் தீர்க்கப்படுகிறது. மேலும் பெண்களின் கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில்தான் கருப்பையின் நரம்பு நுனிகள் வந்து முடிவதால், மெட்டி அணிந்து நடக்கும்போது நரம்பு நுனி அழுத்தப்படுவதாலும் கருப்பை வளர்ச்சிக்கு உதவுகின்றது.

 

வெள்ளி மெட்டி :

* பெண்கள் கர்ப்பம் அடையும்போது மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட உபாதைகள் குறையும். இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்கமுடியாது என்பதற்காக வெள்ளியாலான மெட்டி அணிவித்தார்கள். வெள்ளியில் செய்த மெட்டியை அணிவதால் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை சரி செய்யும். வெள்ளி ஒரு நல்ல கடத்தி என்பதால், பூமியின் துருவத்தில் இருந்து நிறைய ஆற்றலை உள்வாங்கி, உடல் முழுவதும் புத்துணர்ச்சியைப் பரவ செய்கிறது. குழந்தை பிறந்தவுடன் 3வது விரலில் அணியும்போது சில புள்ளிகள் தூண்டப்பட்டு பால் சுரப்பை அதிகப்படுத்தும்.

 

* ஆகவே, பெண்கள் மெட்டியை அணிவதன் மூலம் கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும், கர்ப்பப்பையில் இரத்த ஓட்டம் சீராகவும் இருக்கிறது. இதனால், காலத்தே நல்ல மக்கட்பேற்றோடு தம்பதியினர் சீரும் சிறப்புமாக வாழலாம்.