காது குரும்பி

 காது குரும்பி

 

காதுகள் சரியாக கேட்க வேண்டுமானால், செவிப்பறை (Ear drums) சீராக இருக்க வேண்டும். இதற்கு இயற்கை நமக்குத் தந்துள்ளப் பாதுகாப்பு வளையம்தான், காதுக் குரும்பி. காதுக்குள் செரிமினஸ் சுரப்பிகள் ( Ceruminous glands ) உள்ளன. இவைதான் காதுக்குள் குரும்பியைச் சுரந்து, செவிப்பறையை பாதுக்காக்கின்றன. 

 

குறிப்பாக காதுக்குள் நுழையும்  பூச்சிகள், அழுக்குகள், அந்நியப் பொருட்கள் போன்றவை செவிப்பறையை பாதிக்காதப்படி தடுப்பது, இந்தக் குரும்பிதான். இதை அகற்ற வேண்டிய அவசியமில்லை. தானாகவே மெள்ள மெள்ள ஊர்ந்து வெளியில் வந்துவிடும்.

 

அப்படி அகற்ற வேண்டிய கட்டாயம் வந்தால் சொட்டு மருந்து இருக்கு அதை காதுக்குள் விட்டால் குரும்பி ஊர்ந்து வெளியே வந்துவிடும்.

 

செவியைக் காப்போம். பட்ஸ் வேண்டாம். நாம் அதைவைத்து சுத்தம் செய்யும்போது குரும்பி ஜவ்வுக்கிட்டே போனால் செவிப்பறைக்கு ஆபத்து. பட்ஸ் செவிப்பறையைத்

தொட்டால் ஜவ்வு கிழியும். காது கேட்காது.