உடல் பலம் பெற நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக எளிய நாட்டு வைத்தியம்

உடல் பலம் பெற நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக எளிய நாட்டு வைத்தியம்

தேவையான பொருள்கள்:

கோரைக்கிழங்கு 
சாரணைவேர்
விரலி மஞ்சள் 
வேப்ப மரப்பட்டை

  இவைகளை சம அளவாக பொடி செய்து கொண்டு காலை மாலை இருவேளையும் மூன்று கிராம் அளவு எடுத்து ஆறிய வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர உடலுக்கு வலிமை உண்டாகும் உடலில் உள்ள கெட்ட நாற்றம் நீங்கும் மேனியில் நறுமண வாசம் வீசும் இளமையை நீட்டித்துக் கொள்ள இதுவே ஒரு நல்ல மருந்தாகும்

  இந்த மருத்துவ முறையை கையாளும் பொழுது உப்பு புளி காரத்தை சற்று குறைத்து இதை ஒரு மாத காலம் கடைபிடித்து வந்தால் உடலுக்கு அதீத பலம் உண்டாகும் நோய் எதிர்ப்பு சக்திக்கு இது ஒரு நல்ல மருந்தாகும்

சரீர புஷ்டி சூரணம்

தேவையான பொருட்கள்

சுக்கு 
மிளகு
திப்பிலி 
கடுக்காய் 
நெல்லிக்காய் 
தான்றிக்காய் 
சீரகம் 
சிற்றரத்தை 
சிறுநாகப்பூ 
மரமஞ்சள் 
கொடிவேலி வேர் 
கடுகுரோகிணி 
அமுக்குறா கிழங்கு

    இவை அனைத்தையும் ஓர் எடையாக எடுத்து சூரணம் செய்து ஒன்றாக கலந்து இதில்  மூன்று கிராம் எடுத்து வெந்நீருடன் கலந்து காலை மாலை இருவேளையும்  நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள நோய்கள் அனைத்தும் நீங்கும் 

  வறண்டு வற்றியிருக்கும் தேகத்தில் தசை பிடிப்பு ஏற்படும் வாய்வு கோளாறுகள் முழுமையாக நீங்கும் மேலும் உடலுக்கு நோய் தோன்றுவதற்கு காரணமான வாத பித்த சிலேத்துமத்தை சமநிலைப்படுத்தி உடலை நன்கு இயங்கச் செய்யவும்