வயிற்று உப்புசம் நீங்க...

 வயிற்று உப்புசம் நீங்க...

 

உடலில் வாய்வு உண்டாக இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, இரைப்பை மற்றும் சிறுகுடலில் செரிமானமாகாத சில உணவுப் பொருள்கள் பெருங்குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவால் உடைக்கப்படும் போது உண்டாகும் வாய்வு. மற்றொன்று, வாய்வழியாக உடலுக்குள் செல்லும் வெளிக்காற்று. இவை இரைப்பையிலிருந்து ஏப்பமாகவோ, குடலைச் சென்றடைந்ததும் ஆசனவாய் வழியாகவோ உடலிலிருந்து வெளியேற வேண்டும். அப்படி வெளியேறாமல் உடலுக்குள்ளேயே தங்கிவிடுவதால், வயிறு வீங்கி உப்புசம் ஏற்படுகிறது. 

 

தேவையான பொருட்கள்..

 

சுக்கு – 50 கிராம்

மிளகு – 50 கிராம்

திப்பிலி – 50 கிராம்

சீரகம் – 50 கிராம்

ஓமம் – 50 கிராம்

கருஞ்சீரகம் – 50 கிராம்

இந்துப்பு – 25 கிராம்

கடுக்காய் – 50 கிராம்

உலர்ந்த கொத்தமல்லி இலை – ¼ கிலோ

உலர்ந்த கறிவேப்பிலை இலை – ¼ கிலோ

 

     இவையனைத்தையும் கலந்து தூளாக்கவும். இதில் காலை, மதியம் இரவு மூன்று வேளையும் ஒரு ஸ்பூன் அளவில் உணவுக்குப் பின் சாப்பிட்டு வர, செரிமானக் கோளாறுகள் நீங்கும். நுரையீரல் பலப்படும். வயிற்று உப்புசம் தீரும்.