வெண்ணெய் என்னும் மாமருந்து...
வெண்ணெய் என்னும் மாமருந்து...
வெண்ணெய் என்றவுடன் கார்மேகக் கண்ணனே நினைவில் நிற்பார்.
கண்ணனுக்குப் பிடித்த வெண்ணெய் நிறையப் பேர்களை தன் ரசிகர்களாகக் கவர்ந்துள்ளது.
வீட்டில் தயிரைக் கடைந்து வெண்ணெயைப் பிரித்து எடுக்கும்போது தயிர் கடையும் ஓசையும், கடைந்த வெண்ணெயின் மணமும் சுவையும் இப்பொழுதும் நாவில் நீரினை வரவழைக்கும்.
கடைந்த வெண்ணெய் வெள்ளை முதல் அடர் மஞ்சள் வரையிலான நிறங்களில் இருக்கிறது. அடர் மஞ்சள் நிற வெண்ணெயே சிறந்தது.
வெண்ணெயானது லேசான இனிப்புச் சுவையுடன் வழுவழுப்பாக இருக்கும். வெண்ணெயானது 80 சதவீதம் கொழுப்பினைக் கொண்டுள்ளது. இதில் 400 விதமான கொழுப்பு அமிலங்களும், கொழுப்பில் கரையும் விட்டமின்களையும் கொண்டுள்ளது.
இதனுடன் உப்பினைச் சேர்க்கும்போது நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமலும், அதனுடைய தன்மை மாறாமலும் இருக்கிறது.
கடைகளில் விற்கப்படும் வெண்ணெயானது பெரும்பாலும் உப்பு
சேர்க்கப்பட்டே விற்கப்படுகிறது. இக்கட்டுரையில் வெண்ணெய் என குறிப்பிடப்படுவது
தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட உப்பில்லாத வெண்ணெய் ஆகும்.