கண்ணாடி அணிவது தீர்வாகுமா?
கண்ணாடி அணிவது தீர்வாகுமா?
நமது கண் நேரடியாக மூளையோடு இணைக்கப்பட்டுள்ளது அதனால்தான் தலையில் அடிபடும்போதெல்லாம் கண்கள் இருள்கின்றது மேலும் கண்களை கட்டுப்படுத்தும் உறுப்பாக கல்லீரல் திகழ்கின்றது ,
கல்லீரலில் மஞ்சள்காமாலை வந்தால் கண்பார்வையும் பாதிக்கப்படும் காரணமும் இதுதான்
மேலும் மது அருந்தியவரின் கல்லீரல் பாதிக்கபடுவதால்தான் கண்களும் சேர்ந்து பாதிக்கப்படுகின்றது
இந்த நிலையில் கண் மருத்துவர்களிடம் பார்வை பிரச்சினைக்காக செல்கின்றீர்கள் அவரும் முதலில் பவர்குறைந்த கண்ணாடியை உங்களுக்கு பரிந்துரைப்பார் இறுதியாக உங்களது நிலை என்ன ஆகும்? தடிமனான சோடாபுட்டி கண்ணாடியை அதாவது அதிக பவருடைய கண்ணாடியை நீங்கள் அனியவேண்டிய நிலை வருகின்றதே இது குறித்து நீங்கள் சிந்திப்பதே இல்லையே?
காரணம் கண்டாக்டா் கண்ணை மட்டுமே ஆராய்ந்ததால் வந்த வினை இது சுருங்க சொன்னால் நீங்கள் அணியும் பவர் கிளாஸ் உங்களது பார்வைத் திறனை படிப்படியாக பாழாக்கிவிடும் ,
என்னதான் தீர்வு?
கல்லீரலை பலப்படுத்த.வேண்டும் அதை பலமாக்கும் உணவுகளை உண்ண வேண்டும் ,
நன்றாக ஆழ்ந்த இரவுத்தூக்கம் மிகவும் அவசியமானது இது கண்ணின் பார்வைத் திறனை வெகுவாக அதிகரிக்கும் ,
அதிக வெளிச்சத்தின் கீழ் கண்ணோயாளிகள் இருப்பதை தவிர்க்க வேண்டும் ,
மனசஞ்சலம் இல்லாமல் பார்த்து.கொள்வது அவசியமானது
கல்லீரல் எந்தளவுக்கு சிறப்பாக செயல்படுகின்றதோ அந்தளவுக்கே நமது கண்பார்வை திறனும் அதிகரிக்கும் என்பதை உணருங்கள் நண்பர்களே ... %
எப்போதும் கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைல், டி.வி பார்த்துக் கொண்டிருப்பதால் பார்வைத் திறன் பாதிப்படைகிறது. கண்களை இமைக்காமல் ஒளிர் திரையைப் பார்க்கும்போது கண்கள் வறண்டு போகின்றன. கண்ணுக்குத் தேவையான ஆக்சிஜன், ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டு கண் எரிச்சல், கண் சிவத்தல் உள்ளிட்டவை தொடங்கி பார்வை குறைபாடு வரை பல பாதிப்புகள் வரிசை கட்டுகின்றன. இதைத் தவிர்க்க தினசரி சில எளிய பயிற்சிகளை செய்தாலே போதும். பார்வை திறன் மேம்படும்.
கண்களை கதகதப்பாக்குங்கள்… கைகளை நன்கு தேய்த்து உள்ளங்கையைக் கண்களின் மீது சில நொடிகள் வைக்க வேண்டும். இப்படி 5, 6 முறை செய்யலாம். இது கண்களின் சோர்வை நீக்கும். கண்கள் புத்துணர்வு பெறும்.
கடிகார முள் சுற்றுவது போல கண்களை நன்கு சுழற்றுங்கள். பிறகு எதிர்த்திசையில் கண்களைச் சுழற்றுங்கள். இப்படி நேரம் கிடைக்கும் போது எல்லாம் 5-6 முறை செய்யலாம்.
நேராக நிமிர்ந்து அமர்ந்து, கண்களை ஒரு சில விநாடிகளுக்கு நன்கு இமையுங்கள். பிறகு சில விநாடிகள் கண்களை மூடியிருங்கள். பிறகு மீண்டும் கண்களை நன்கு திறந்து இமையுங்கள். இப்படி செய்வதன் மூலம் கண்களின் வறட்சி நீங்கும். பார்வை நரம்புகள் வலுப்படும்.
நீண்ட நேரம் லாப்டாப், மொபைலை பார்த்துக் கொண்டிருந்தால் கண்ணில் வறட்சி ஏற்படும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை அல்லது இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை கண்களுக்கு ஓய்வு அளியுங்கள். 10 அடி தொலைவில் உள்ள ஒரு பொருளையும் உங்கள் கை அல்லது வேறு பொருளை மாறி மாறி பாருங்கள். சில விநாடிகள் கழித்து கண்களை நன்கு மூடுங்கள். பிறகு மீண்டும் அருகில் உள்ள உங்கள் கை தொலைவில் உள்ள வேறு ஒரு பொருளை மாறி மாறி பாருங்கள். இப்படிச் செய்யும் போது கண்களின் தசைகள் வலுப்பெறும். பார்வை திறன் மேம்படும்.
20 – 20 – 20 விதி: தொடர்ந்து கம்ப்யூட்டர், மொபைல் ஒளிர் திரையைப் பார்க்காதீர்கள். ஒவ்வொரு 20 நிமிடத்துக்கு ஒரு முறை 20 அடி தொலைவில் உள்ள ஒரு பொருளை 20 விநாடிகளுக்கு பாருங்கள். பசுமையான தாவரங்கள். செடி, இலைகளைப் பார்க்கும் போது கண்கள் புத்துணர்வு பெறும்.
எளிய மருத்துவ தீர்வு :-
கண்களை இமைபோல காக்கும் நந்தியாவட்டை எனும் விழிமூலிகை கண்களில் ஏற்படும் 96வகைக் குற்றங்களுக்கும் ஒரே தீர்வு. இரவில் அதிகநேரம் அலைபேசி பார்ப்பவர்கள் வெகுவிரைவில் விழித்திரை குறைபாட்டில் சிக்கிக்கொள்ளும் அபாயமுண்டு. அப்படி விழித்திரை பாதிப்பில் எவரேனும் பாதிப்படைந்தால் வாரத்திற்கு நான்குமுறை இப்பூவினை சுத்தமான பருத்தி துணியில் வைத்து பிழிந்து சாற்றை மூன்று சொட்டுவிகிதம் காலை மாலை 21 நாட்கள் கண்களில் விட்டுவர கண்பார்வை மிகத் தெளிவாவதுடன் கண் சார்ந்து வரும் தலைவலியும் குணமடையும்.
காலை & மாலை எப்போதும் புதிய பூவை பயன்படுத்தவும்.ஒற்றை மற்றும் அடுக்கு நந்தியாவட்டை இரண்டுமே ஒரே மருத்துவ குணம் உடையது.