வறட்டு இருமல் இருக்கா? அப்போ சுக்கை பயன்படுத்துங்க!

 வறட்டு இருமல் இருக்கா? அப்போ சுக்கை பயன்படுத்துங்க! 

 

தேரையர் என்ற சித்தர், தன் பாடலில் 'சுக்கு வீட்டில் இருந்தால், சுகம் உடம்பில் இருக்கும்' என்று சொல்லியிருக்கிறார். 

 

சுக்கில் எண்ணற்ற மருத்துவக் குணங்கள் உள்ளது. இஞ்சி காய்ந்தால் தான் சுக்கு கிடைக்கும். சுக்கு காரம், மணம் நிறைந்தது. தலைவலிக்கு, உடம்பு வலிக்கு அப்பப்போ பக்கத்தில் இருக்கும் மெடிக்கல் ஷாப் போய் எதையாவது மாத்திரை வாங்கி வந்து போட்டுக்கொள்வோம். 

 

இந்த பழக்கத்தை நாம் வைத்துக் கொண்டால் உடலுக்கு நல்லது கிடையாது. எனவே, இயற்கையோடு ஒன்றி வாழ நாம் பழகிக்கொள்ள வேண்டும், 

 

சுக்கின் மருத்துவ குணங்கள் :

* தொண்டையில் வறட்டு இருமல் ஏற்பட்டால் சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்து தொண்டையில் பூசி வந்தால் குரல் இயல்பு நிலைக்கு வரும். 

 

நெஞ்சு சளிக்கு

சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவை அனைத்தையும் கொதிக்க வைத்து கஷாயமாக பருகி வந்தால் நெஞ்சு சளி குணமாகும். 

 

தலைவலிக்கு

தலைவலிக்கு சுக்கு நிவாரணம் தரும் எந்த விதமான தலைவலி வந்தால் சுக்கை நெற்றியில் பற்றுப் போட்டால் அடுத்த சில நிமிடங்களில் நிவாரணம் கிடைக்கும். வலி இருக்கும் இடங்களில் சுக்கை தேய்த்தால் இதமாக இருக்கும். ஆனால் வலி போனது எரிச்சல் கொடுக்கும். அப்படி எரிச்சல் கொடுத்தால் தலைவலி சரியானதாக அர்த்தம். 

 

மூட்டு வலிகளுக்கு

சுக்குடன் சிறிது பால் சேர்த்து அரைத்து, சூடாக்கி, மிதமான சூட்டில் வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும். 

 

பித்தம் தெளிய

சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் சரியாகும். 

 

வாயுத் தொல்லைக்கு

சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை குணமாகும், 

 

வாதம் ஆரம்ப நிலைக்கு

சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து வந்தால் ஆரம்பநிலை வாதம் சரியாகும். 

 

உடல் அசதிக்கு

சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, "சுக்கு நீர்" காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி பறந்து போகும். 

 

அலர்ஜிக்கு

சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை நீங்கும். 

 

மாந்தம் சரியாக 

சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் சரியாகும். 

 

வாந்தி, குமட்டலுக்கு

சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் சரியாகும். 

 

கிருமிகள் அழிய

சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள கிருமிகள் அழிந்து போகும், 

 

மூல நோய்க்கு

சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் குணமாகும். 

 

பூச்சிக்கடி விஷம் முறிய

தேள், பூரான் கடிக்கு, சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்றால் விஷம் முறிந்துவிடும். 

 

இருமல் சரியாக 

சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் சரியாகும்.

 

வயிற்றுப்புண்ணுக்கு 

தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி போட்டு சாப்பிட்டால் வயிற்றுப் புண் குணமாகும்.