சருமத்தைப் பளபளப்பாக்கும் கஸ்தூரி மஞ்சள்...

 சருமத்தைப் பளபளப்பாக்கும் கஸ்தூரி மஞ்சள்...

 

தினமும் நாம் பயன்படுத்தும் சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, கஸ்தூரி மஞ்சளை முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். கஸ்தூரி மஞ்சளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

 

மென்மையான சருமத்திற்கு

* மென்மையான சருமம் கொண்டவர்கள், வெறும் மஞ்சளை பூசாமல், இதனுடன் பால், தயிர் கலந்து பூசி வந்தால் நல்ல பலன் தரும்.

 

எண்ணெய் பசையுள்ள சருமத்திற்கு

* எண்ணெய் சருமம் உள்ளவர்கள், கஸ்தூரி மஞ்சளோடு பன்னீரைக் கலந்து உபயோகித்தால் முகம் பளபளப்பாகும்.

 

ஃபேஷ் பேக்

* உங்கள் வீட்டில் எப்போதும் கஸ்தூரி மஞ்சள் பொடி வைத்துக்கொள்வது மிகவும் நல்லது. கஸ்தூரி மஞ்சளை, எலுமிச்சைச்சாறு, முல்தாணிமட்டி, வேப்பிலை விழுது, துளசி விழுது, கடலைமாவு, பயத்தமாவு, கசகசா விழுது, பார்லி விழுது, தேன், பப்பாளி பழம், தக்காளி என அனைத்திலும் சேர்த்து முகத்திற்குப் பயன்படுத்தலாம். 

 

கரும்புள்ளிகள், பருக்கள் மறையும்

* தினமும் கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தி வந்தால் முகத்தில் கரும்புள்ளிகள் மறையும், பருக்கள் வராது. தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகச்சுருக்கம் நீங்கும். பரு, சூடுக்கட்டிகள், காயங்களை குணப்படுத்தும் வல்லமைக் கொண்டது. 

 

முகம் கண்ணாடி போல் பளபளக்க

* தினமும் முகம் பளபளப்பாக இருக்க கஸ்தூரி மஞ்சளையும், பூலாங்கிழங்கையும் சம அளவு எடுத்து அரைத்து முகத்தில் பூசி கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வர வேண்டும்.

 

* கஸ்தூரி மஞ்சள், பயித்தமாவு மற்றும் தயிரை ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசி 45 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பளபளக்கும்.

 

சருமத்தை பாதுகாக்க

* முகத்தில் உங்கள் இயற்கை அழகை பாதுகாக்க கஸ்தூரி மஞ்சள், கடலை மாவு, பச்சைப்பயறு மாவு, பாலாடை ஆகியவற்றை நன்றாக கலந்து முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்யலாம்.

 

தோல் நோய்கள் குணமாகும்

* கஸ்தூரி மஞ்சளை தினமும் குளிக்கும்போது பூசி வந்தால் பெரும்புண்கள், கரப்பான் போன்றவை குணமாகும். சோர்வாக இருப்பவர்களை, இதில் இருந்து வரும் நறுமணம் உற்சாகமாக உணரவைக்கிறது.

 

ஆறாத புண்கள், பித்த வெடிப்பிற்கு

* 100 கிராம் கஸ்தூரி மஞ்சள் பொடியை, ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொள்ளவும். அடிபட்ட புண்களில் இந்த எண்ணெயைத் தடவி வந்தால், சிறந்த கிருமிநாசினியாகச் செயல்பட்டு, ஆறாத காயங்கள், பித்தவெடிப்பு, சொறி, சிரங்கைக் குணம் ஆக்கும். வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது.

 

ஜீரணத்திற்கு, பசியைத் தூண்ட

* கஸ்தூரி மஞ்சள் பொடியை, தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் வயிற்று வலி தீரும். பாலில் கலந்து குடித்தால், பிராங்கைட்டிஸ் என்னும் நுரையீரல் தொற்று மற்றும் இருமலை குணப்படுத்துகிறது. பசியை உண்டாக்கும். 

 

தலைவலிக்கு

* தலைவலி உள்ளவர்கள் கஸ்தூரி மஞ்சள் பொடியை, வெந்நீரில் கலந்து, தலையில் தேய்த்து மசாஜ் செய்தால், சில நிமிடங்களில் தலைவலி குணமாகும்.

 

காசநோய் இரைப்பிற்கு

* காச நோயாளிகள் கஸ்தூரி மஞ்சளை நல்லெண்ணெய் விளக்கில் சுட்டு, அப்போது ஏற்படும் புகையை மூக்கின் வழியாக உள்ளே சுவாசித்தால் காசநோயின் போது ஏற்படும் இரைப்பு கட்டுப்படுத்தப்படுகிறது.

 

* கஸ்தூரி மஞ்சளை தூள் செய்து 250 மிலி வெந்நீரில் சாப்பிட்டு வர சொறி சிரங்கு போன்றவை குணமாகும்.