முகப்பரு வடுவை நீக்கணுமா?

 முகப்பரு வடுவை நீக்கணுமா? 

தினமும் இரவில் இதை செய்தாலே போதும்:

 

முகப்பருக்கள் வந்து மறைந்தாலும், அது வந்ததற்கான தடம் அப்படியே இருக்கும். 

பரு வந்து நீங்கிய இடத்தில் உள்ள பாதிப்படைந்த இறந்த செல்களை நீக்கினால்தான் தோலில் உயிரணுக்கள் புதிதாக உருவாகும். 

இதனை போக்க அழகு நிலையங்களுக்கு தான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களால் கூட எளிய முறையில் அகற்ற முடியும். 

அந்தவகையில் தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்,

 

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய் சுத்தமானதாக இருக்கட்டும். அதை மட்டும் கவனத்தில் வையுங்கள். கால் டீஸ்பூன் விளக்கெண்ணெயை ஒரு தட்டில் விட்டு விரலால் தொட்டு முகப்பரு இருக்கும் இடத்தில் இலேசாக மசாஜ் செய்தபடி தேய்க்கவும். மறுநாள் காலை முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுக்கவும். முகப்பரு வடு மறையும் வரை இதை செய்யலாம். 

 

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய் இரண்டு சொட்டு எடுத்து வடுக்கள், கருப்பு நிறமாக மாறிய முகப்பரு வடுக்கள் போன்ற இடத்தில் தடவி மசாஜ் செய்யவும். இரவு மசாஜ் செய்த பிறகு காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுக்கவும், முகப்பரு வடுக்கள் மறையும் வரை இதை செய்து வரலாம். 

 

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய் சில துளி எடுத்து சருமம் பாதிக்கப்பட்ட பகுதியில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். சருமத்தில் எண்ணெய் முழுமையாக உறிஞ்சும் வரை மசாஜ் செய்ய வேண்டும். பிறகு முகத்துக்கு சூடான நீராவி படும்படி செய்தால் வடுக்களை போக்க செய்யும். அல்லது சூடான துணியை எடுத்து முகத்தில் வைத்து எடுக்கவும். மறுநாள் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். 

 

தேயிலை எண்ணெய்

தேயிலை எண்ணெய் உள்ளங்கையில் விட்டு ஃபேஸ் வாஷ் அல்லது க்ளென்சரை எடுத்து கொள்ளுங்கள். எண்ணெய் சில துளிகள் சேர்த்து முகத்தில் தடவி கொள்ளவும். நன்றாக மசாஜ் செய்த பிறகு 20 நிமிடங்களுக்கு வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுக்கவும். 

 

எலுமிச்சை எண்ணெய்

எலுமிச்சை எண்ணெயை வடுக்களில் தடவி வந்தால் அதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் சரும நிறத்தை சுத்தம் செய்து சருமத்தை பிரகாசமாக வைத்திருக்க உதவும்.