கல்லடைப்பு கரைக்கும் கரும்புச்சாறு...

 கல்லடைப்பு கரைக்கும் கரும்புச்சாறு...

 

தேவையான பொருட்கள் :

1. கரும்புச்சாறு – 100 மி.லி

2. இஞ்சிச்சாறு – 30 மி.லி

3. எலுமிச்சை சாறு – 30 மி.லி

4. சீரகம் – 10 கிராம்

5. சோம்பு – 10 கிராம்

6. தண்ணீர் – 200 மி.லி

 

முதலில் தண்ணீரில் சீரகம், சோம்பு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டவும். பின்னர் கரும்பு, இஞ்சி, எலுமிச்சை இவற்றை தனித்தனியே சாறாக்கி மேற்கண்ட கசாயத்துடன் கலந்து பருகவும்.

கல்லடைப்பு கரையும். சிறுநீர் வியாதிகள் தீரும். பித்த படபடப்பு, நெஞ்செரிச்சல் குணமாகும். இரத்த அழுத்தம் சீராகும். இளநரை மறையும். புத்துணர்வு தந்து உடலின் நீர் சத்தை காக்கிறது. காமாலை வராமல் தடுக்கிறது. மலச்சிக்கல் தீரும்.  உடல் பருமன், தொப்பை குறையும். காபி, டீக்கு மாற்றாக தினமும் சாப்பிடலாம்.